ஸ்பெஷலான புதிய எம்வி அகுஸ்ட்டா பைக் இந்தியாவில் அறிமுகம்!
புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800ஆர்ஆர் அமெரிக்கா எடிசன் சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மொத்தமாக 5 யூனிட்டுகள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு ரூ.18.73 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சாதாரண புரூட்டேல் 800ஆர்ஆர் மாடலுக்கு ரூ.18.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இறக்குமதி செய்யும்போது இருந்த பணமாற்று விகிதத்தில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக, சாதாரண மாடலைவிட இந்த ஸ்பெஷலான புருட்டேல் 800ஆர்ஆர் அமெரிக்கா எடிசன் குறைவான விலையில் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

1975களில் விற்பனையில் இருந்த எம்வி அகுஸ்ட்டா எஸ் அமெரிக்கா 750 மாடலை நினைவூட்டும் விதத்தில் இந்த ஸ்பெஷல் எடிசனுக்கு அமெரிக்கா எடிசன் என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு பினனர் அமெரிக்கா பெயரை பயன்படுத்தி இருக்கிறது எம்வி அகுஸ்ட்டா நிறுவனம்.
சாதாரண மாடலைவிட அதிக கவர்ச்சியை அளிக்கும் ஏராளமான சிறப்பு வண்ணக் கலவையில் வந்துள்ளது. புதிய அமெரிக்கா எடிசன் மாடலில், சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களில் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா எடிசன் ஸ்டிக்கர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இடம்பெற்றுள்ளது. அத்துடன், ஒவ்வொரு பைக்கிற்கும் தனித்தனி தயாரிப்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புருட்டேல் 800ஆர்ஆர் அமெரிக்கா எடிசன் வாடிக்கையாளர்களுக்கு தங்களது பைக்கின் பிரத்யேக தன்மையையும், நம்பகத்தன்மையையும் குறிக்கும் விதத்தில், சிறப்பு சான்றும் வழங்கப்படும்.

சாதாரண புருட்டேல் 800ஆர்ஆர் பைக்கில் இருக்கும் அதே 798சிசி 3 சிலிண்டர் எஞ்சின்தான் இந்த மாடலிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையுயம், 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் மர்சோச்சி நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் சாக் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

உலக அளவில் மொத்தமாக 200 பைக்குகள் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிசன் பேட்ஜில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. அதில், 5 யூனிட்டுகள் இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபரில்தான் எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800ஆர்ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அதன் சிறப்பு பதிப்பு மாடலும் இப்போது களமிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 175 கிலோ எடை கொண்டது. இதன் ரக பைக்குகளிலும் மிக இலகுவான, அதிவேகமான மாடலாக குறிப்பிடலாம்.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 821, கவாஸாகி இசட்900 மற்றும் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் உள்ளிட்ட சூப்பர் பைக்குகளுக்கு போட்டியான மாடல்தான எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800ஆர்ஆர். இதன் சிறப்பு மதிப்பு மாடல் பிரத்யேகத்தை விரும்பும் சூப்பர் பைக் பிரியர்களை கவர்ந்திழுக்கும்.


Click it and Unblock the Notifications








