எம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டர் 800 சீரிஸ் வரிசையில் மூன்று பைக்குகள் அறிமுகம்!

எம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டெர் 800 வரிசையில் மூன்று பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

எம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டர் 800 சீரிஸ் வரிசையில் மூன்று பைக்குகள் அறிமுகம்!

சூப்பர் பைக் தயாரிப்பில் பிரபலமான இத்தாலியை சேர்ந்த எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் இந்தியாவில் கைனெட்டிக் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. கைனெட்டிக் நிறுவனத்தின் மோட்டோராயல் பிரிமீயம் பிராண்டின் கீழ் எம்வி அகுஸ்ட்டா பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

எம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டர் 800 சீரிஸ் வரிசையில் மூன்று பைக்குகள் அறிமுகம்!

இந்த நிலையில், இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், எம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டெர் 800 பைக் வரிசையில் மூன்று மாடல்களை இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது கைனெட்டிக் மோட்டோராயல் நிறுவனம். மொத்தமாகவே 200 யூனிட்டுகள்தான் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

எம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டர் 800 சீரிஸ் வரிசையில் மூன்று பைக்குகள் அறிமுகம்!

எம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர், டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர் அமெரிக்கா மற்றும் டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர் பைரெல்லி ஆகிய பெயர்களில் இந்த மாடல்கள் வந்துள்ளன. இதில், முதல் இரண்டு மாடல்கள் ரூ.18.73 லட்சத்திலும், பைரெல்லி மாடலானது ரூ.21.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

எம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டர் 800 சீரிஸ் வரிசையில் மூன்று பைக்குகள் அறிமுகம்!

இந்த மூன்று பைக்குகளிலுமே ஒரே எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் இடம்பெற்றுள்ள 800 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 140 எச்பி பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

எம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டர் 800 சீரிஸ் வரிசையில் மூன்று பைக்குகள் அறிமுகம்!

இந்த மூன்று பைக்குகளையும் வித்தியாசப்படுத்தும் விஷயம் வண்ணத் தேர்வுகள்தான். டிராக்ஸ்டெர் 800 ஆர்ஆர் பைக் மாடலானது ஐஸ் பியர்ல் ஒயிட் - டார்க் மேட் க்ரே மற்றும் நார்டோ க்ரே - டார்க் மேட் க்ரே ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

எம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டர் 800 சீரிஸ் வரிசையில் மூன்று பைக்குகள் அறிமுகம்!

அமெரிக்கா என்ற வேரியண்ட்டானது மேற்கண்ட இரண்டு வண்ணத் தேர்வுகளில் கூடுதலாக விசேஷ பாடி டீக்கெல் ஸ்டிக்கர் அலங்காரத்துடன் கிடைக்கும். பைரெல்லி வேரியண்டானது மேட் பிளாக் - பைரெல்லி யெல்லோ மற்றும் ஐஸ் பியர்ல் - அமெரிக்கன் புளூ ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

எம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டர் 800 சீரிஸ் வரிசையில் மூன்று பைக்குகள் அறிமுகம்!

இந்த புதிய மாடல்கள் அறிமுகம் குறித்து மோட்டோராயல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜிங்கியா பிரோடியா கூறுகையில்,"இந்தியாவின் ஒரே மல்டி பிராண்டு சூப்பர் பைக் வினியோகஸ்தரான எமது மோட்டோராயல் நிறுவனம் எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் அனைத்து சூப்பர் பைக்குகளையும் விற்பனை செய்வதில் பெருமிதம் கொள்கிறோம். எம்வி அகுஸ்ட்டா பைக்குகள் பாரம்பரியம், புதுமை, பாதுகாப்பு, வேகம் மற்றும் மிடுக்கான தோற்றம் என அனைத்திலும் சிறந்தவை என்று தெரிவித்தார்.

எம்வி அகுஸ்ட்டா டிராக்ஸ்டர் 800 சீரிஸ் வரிசையில் மூன்று பைக்குகள் அறிமுகம்!

தற்போது சென்னை, மும்பை, பெங்களூர், கெச்சி, வசி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் மோட்டோராயல் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் டெல்லி, இந்தூர், சண்டிகர், ஆமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களில் ஷோரூம்களை திறக்க மோட்டோராயல் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2019, 17:14 [IST]
English summary
Kinetic group's venture Motoroyale has launched three bikes under the MV Agusta Dragster Series in India, with price starting at ₹18.73 lakh (ex-showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+