350 சிசி பைக்கை தயாரிக்க எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் திட்டம்!

விற்பனை வளர்ச்சியை தக்க வைப்பதற்காக உலகின் முன்னணி பிரிமீயம் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் நடுத்தர வகை திறன் கொண்ட பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பில் இறங்கி வருகின்றன. பிஎம்டபிள்யூ மோட்டோராடு, ஹார்லி டேவிட்சன், டிரையம்ஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே நடுத்தர ரக பைக் தயாரிப்பில் இறங்க முடிவு செய்து கூட்டணி அமைத்துவிட்டன.

350 சிசி பைக்கை தயாரிக்க எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் திட்டம்!

இந்த வரிசையில் தற்போது சூப்பர் பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த எம்வி அகுஸ்ட்டா நிறுவனமும் இணைய இருக்கிறது. சீனாவை சேர்ந்த லோன்சின் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து 350 முதல் 500 சிசி வரையிலான ரகத்தில் நடுத்தர வகை பைக் மாடல்களை தயாரிக்க எம்வி அகுஸ்ட்டா திட்டமிட்டுள்ளது.

350 சிசி பைக்கை தயாரிக்க எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் திட்டம்!

இந்த புதிய பைக் மாடல்களின் உருவாக்கப் பணிகளை எம்வி அகுஸ்ட்டாவும், உற்பத்தி மற்றும் வினியோக பணிகளை லோன்சின் மோட்டார் நிறுவனமும் இணைந்து செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

350 சிசி பைக்கை தயாரிக்க எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் திட்டம்!

புதிய பைக் மாடல்களின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இவை புத்தம் புதிய மாடல்களாக ஆரம்ப கட்டத்திலிருந்து உருவாக்கப்படுமா அல்லது லோன்சின் நிறுவனத்தின் பைக் மாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்படுமா என்பது குறித்தும் எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. கூட்டணி அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

350 சிசி பைக்கை தயாரிக்க எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் திட்டம்!

அதேநேரத்தில் எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் கைவண்ணத்தில் ட்ரெல்லிஸ் ஃப்ரேம், சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் எஞ்சின்களுடன் புதிய பைக் மாடல்களை எதிர்பார்க்கலாம். மேலும், புரூட்டேல், எஃப் சீரிஸ்் மற்றும் டூரிஷ்மோ வெலாஸ் ஆகியவற்றின் விலை குறைவான மாடல்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

350 சிசி பைக்கை தயாரிக்க எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் திட்டம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மேலும், லோன்சின் நிறுவனம் 800 சிசி பைக்குகள் தயாரிப்பில் இறங்குவதற்கான வாய்ப்பை எம்வி அகுஸ்ட்டாவுடனான கூட்டணி மூலமாக பெறும் வாய்ப்புள்ளது. இந்த மாடல்களை சீனாவில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

350 சிசி பைக்கை தயாரிக்க எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் திட்டம்!

வரும் 2021ம் ஆண்டு எம்வி அகுஸ்ட்டா - லோன்சின் கூட்டணியிலான முதல் பைக் மாடல் எதிர்பார்க்கப்படுகிறு. இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் முதல் மாடலை எம்வி அகுஸ்ட்டா பார்வைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

350 சிசி பைக்கை தயாரிக்க எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் திட்டம்!

எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் விலை குறைவான பைக் மாடல்கள் கேடிஎம், ஹஸ்க்வர்னா, கவாஸாகி, பெனெல்லி உள்ளிட்ட நிறுவனங்களின் பைக் மாடல்களுடன் போட்டி போடும். இந்தியாவிலும் இந்த மாடல்கள் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
Italian super bike manufacturer, MV Agusta is planning to enter 350-500cc motorcycle market with Chinese partner Loncin.
Story first published: Friday, July 26, 2019, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X