புதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் நாளை மறுதினம் அறிமுகமாகிறது!

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 என்ற டூரர் ரக பிரிமீயம் பைக் நாளை மறுதினம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் டீலரிடமிருந்து எமக்கு கிடைத்த பிரத்யேக தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் நாளை அறிமுகமாகிறது!

பிரிமீயம் பைக் தயாரிப்பில் சிறந்து விளங்கும் எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் இந்தியாவில் தனது பைக் மாடல்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பிரிமீயம் டூரர் ரகத்திலான தனது டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக்கை நாளை மறுதினம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக களமிறக்க உள்ளது.

புதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் நாளை அறிமுகமாகிறது!

எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மிக கவர்ச்சிகரமாக இருக்கிறது. எம்வி அகுஸ்ட்டா எஃப்-3 800 ஸ்போர்ட்ஸ் பைக்கின் சில முக்கிய பாகங்களை இது பங்கிட்டுக் கொண்டுள்ளது.

புதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் நாளை அறிமுகமாகிறது!

இந்த பைக்கில் உயரமான விண்ட் ஷீல்டு அமைப்பு, பாதியளவு ஃபேரிங் பேனல்கள், லாங் டிராவல் ஃபோர்க்குகள், கைகளுக்கு ஏதுவான ஹேண்டில்பார், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் நாளை அறிமுகமாகிறது!

இந்த பைக்கில் 3 சிலிண்டர்கள் கொண்ட 798 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 83 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் குயிக் ஷிஃப்ட் வசதிகளும் உள்ளன.

புதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் நாளை அறிமுகமாகிறது!

இந்த பைக்கில் ரைடு பை வயர் த்ராட்டில் தொழில்நுட்பம் உள்ளது. எட்டு விதமான நிலைகளில் செயல்படும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மர்சோச்சி அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் இடம்பெர்றுள்ள. பின்புறத்தில் சாக்ஸ் மோனோஷாக் அப்சார்பர் உள்ளது. இது பல்வேறு நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியை பெற்றுள்ளது.

புதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் நாளை அறிமுகமாகிறது!

புதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக்கின் முன்சக்கரத்தில் 4 பாட் காலிபர்கள் கொண்ட 320 மிமீ டியூவல் டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் நாளை அறிமுகமாகிறது!

புதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் ரூ.19 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான விலையில் வர இருப்பது டீலர் வட்டாரங்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 மற்றும் ட்ரையம்ஃப் டைகர் 800 எக்ஸ்ஆர்எக்ஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

புதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் நாளை அறிமுகமாகிறது!

இந்த பைக்கிற்கு ரூ.4 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுவதும் எமக்கு கிடைத்த பிரத்யேக தகவல் மூலமாக தெரிய வந்துள்ளது. நாளை அதிகாரப்பூர்வ விலை மற்றும் கூடுதல் விபரங்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 27, 2019, 12:59 [IST]
English summary
Italian premium bike maker, MV Agusta is all set to launch its premium tourer, the Turismo Veloce 800, on 29 August in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+