கூடுதலாக இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் பஜாஜ் டோமினார்400..!
பஜாஜ் நிறுவனத்தின் டோமினார்400 மோட்டார்சைக்கிள் கூடுதலாக இரண்டு வண்ணங்களில் கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ், சமீபத்தில் டோமினார் 400 என்ற புத்தம் புதிய மாடல் மோட்டார்சைக்கிளினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தொடர்ந்து, இந்த மோட்டார்சைக்கிளின் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களையும், கூடுதல் சிறப்பம்சங்களும் சேர்க்கப்பட்டது. அவ்வாறு, இந்த புதிய மாற்றங்களைப் பெற்ற மோட்டார்சைக்கிளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், அதன் ரசிகர்களைக் கவரும் விதமாக அவ்வப்போது இணையதளத்தில் பரப்பப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், பஜாஜ் டோமினார் 400 குறித்த மேலும் ஒரு டிவிசி வீடியோவினை பஜாஜ் நிறுவனம் இணையத்தில் பரவ விட்டுள்ளது. இந்த வீடியோவில், பஜாஜ் டோமினார், கூடுதலாக இரண்டு வண்ணங்களில் கிடைக்க இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னதாக, இதேபோன்று ஒரு வீடியோவினை சமீபத்தில் பஜாஜ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில், இந்த மோட்டார்சைக்கிள் கிளிப் பச்சை வண்ணத்தில் தயாராகி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது வைரலாகி வரும் புதிய டிவிசி வீடியோவில், பஜாஜ் டோமினார் கருப்பு கலந்த சில்வர் மற்றும் கருப்பு நிறந்த சிவப்பு வண்ணங்களில் கிடைப்பது உறுதியாகி உள்ளது. மேலும், இந்த வீடியோவில் மோட்டார்சைக்கிளினை ஏரே டைனமிக்கிஸுற்கு ஏற்ப உருவாக்கியிருப்பது தெரியவருகிறது. இது, வளைவு நெலிவான பாதையில் சௌகரியமாக செல்வதற்கு ஏதுவாக இருக்கும். இதனை உறுதிப்படுத்தும் விதமாக அந்த வீடியோவில் சில காட்சிகள், பைக் வளைந்து, நெலிந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய டோமினார் 400 பைக்கின் டிசைனில் பெரிய மாறுதல்கள் செய்யப்படவில்லை. ஆனால், இரட்டை பேரல் புகைப்போக்கி அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன், இந்த ஸ்போர்ட்ஸ் க்ரூஸர் மாடல் பைக்கில், எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பெட்ரோல் டேங்கில் பொருத்தப்பட்டுள்ளது. கியர் பொசிஷன் இன்டிகேட்டர், ட்ரிப் மீட்டர், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பது போன்ற பல தகவல்களை இந்த மீட்டர் கன்சோல் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

மேலும், இந்த பைக்கில் 373.3 சிசி லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 35 பிஎச்பி பவரையும், 34 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பைக்கில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு உள்ளது.
சிறப்பான பிரேக்கிங் சிஸ்டத்திற்காக முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. மேலும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய மாடல் மோட்டார்சைக்கிளுக்கு பஜாஜ் நிறுவனம் ரூ. 1.74 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையை நிர்ணயித்துள்ளது.


Click it and Unblock the Notifications








