விற்பனைக்கு களமிறங்கிய பஜாஜின் மலிவு விலை க்ரூஸர் பைக்: விலை மற்றும் முழு விபரம்!

பஜாஜ் நிறுவனம் அதன் மலிவு விலையிலான க்ரூஸர் ரக அவென்ஜர் ஸ்ட்ரீட் 160 ஏபிஎஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த முழு தகவலை இந்த பதிவில் காணலாம்.

விற்பனைக்கு களமிறங்கிய பஜாஜின் மலிவு விலை க்ரூஸர் பைக்: விலை மற்றும் முழு விபரம்!

பஜாஜ் நிறுவனம் அதன் க்ரூஸர் ரகத்திலான அவென்ஜர் ஸ்ட்ரீட் 160 மாடல் மோட்டார்சைக்கிளை ஏபிஎஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள், ரூ. 82,253 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு களமிறங்கியுள்ளது.

விற்பனைக்கு களமிறங்கிய பஜாஜின் மலிவு விலை க்ரூஸர் பைக்: விலை மற்றும் முழு விபரம்!

பஜாஜ் நிறுவனம், அதன் பழைய அவென்ஜர் 180 மாடலை ரீபிளேஸ் செய்யும் விதமாக இந்த புதிய மாடல் அவென்ஜர் ஸ்ட்ரீட் 160 ஏபிஎஸ் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில், புதிதாக அமலுக்குள்ளாக இருக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இணைக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு களமிறங்கிய பஜாஜின் மலிவு விலை க்ரூஸர் பைக்: விலை மற்றும் முழு விபரம்!

மேலும், இந்த மோட்டார்சைக்கிள், சந்தைக்கு மிகவும் புதிய நிறங்களான ஸ்பைசி ரெட் மற்றும் இபோனி பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் களமிறங்கியுள்ளது. இத்துடன் இந்த மோட்டார்சைக்கிளில், 160.4 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 14.7 பிஎச்பி பவரையும், 13.5 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது.

விற்பனைக்கு களமிறங்கிய பஜாஜின் மலிவு விலை க்ரூஸர் பைக்: விலை மற்றும் முழு விபரம்!

இந்த புதிய அவென்ஜர் ஸ்ட்ரீட் 160 ஏபிஎஸ் மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள எஞ்ஜின், அவென்ஜர் 150 மற்றும் 180 மாடலைக் காட்டிலும் அதிக சக்தியை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு களமிறங்கிய பஜாஜின் மலிவு விலை க்ரூஸர் பைக்: விலை மற்றும் முழு விபரம்!

அதேபோன்று, பஜாஜ் நிறுவனம் இந்த புதிய க்ரூஸர் ரக அவென்ஜர் ஸ்ட்ரீட் 160 ஏபிஎஸ் மாடலில் 260mm கொண்ட டிஸ்க் பிரேக்கை இணைத்துள்ளது. இது பைக்கை அதிகவேக பயணத்தின்போதும் சுலபமாக கட்டுபடுத்த உதவும். இதற்காக ஏபிஎஸ் வசதியும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இவை ரைடரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.

விற்பனைக்கு களமிறங்கிய பஜாஜின் மலிவு விலை க்ரூஸர் பைக்: விலை மற்றும் முழு விபரம்!

மேலும், இந்த பைக்கில், அதன் முந்தைய மாடல்களில் பொருத்தப்பட்ட அதே டைமண்ட் ஃப்ரேம்தான் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் இதன் முன் பக்கத்தில் டிரெடிஷனல் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ட்வின் சாக்அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

விற்பனைக்கு களமிறங்கிய பஜாஜின் மலிவு விலை க்ரூஸர் பைக்: விலை மற்றும் முழு விபரம்!

அதேசமயம், இந்த பைக்கின் இருக்கையானது அப்ரைட் வசதி எனப்படும் குழியமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரைடருக்கு அலாதியான பயண அனுபவத்தை வழங்கும். இந்த புதிய அவென்ஜர் ஸ்ட்ரீட் 160 பைக்கின் ஒட்டுமொத்த எடையானது 150கிகி-ஆக இருக்கின்றது. ஆகையால், இதனை கையாள்வது மிகவும் சுலபமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2019, 18:08 [IST]
English summary
New Bajaj Avenger 160 Street Launched In India — Priced At Rs 82,253. Read In Tamil.
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+