பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பஜாஜ் பல்சர் 125 நியான் பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பஜாஜ் பல்சர் பைக் மாடல்கள் இந்தியர்கள் மத்தியில் மிக பிரபலமான பட்ஜெட் பைக் மாடல்களாக விளங்குகின்றன. குறிப்பாக, பல்சர் 150 பைக் மிக நீண்டகாலமாக வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற மாடலாக வலம் வருகிறது.

பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்கும் விதமாக, பல்சர் வரிசையில் 125 சிசி மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது பஜாஜ் நிறுவனம். பல்சர் 150 மாடலின் டிசைன் அம்சங்களுடன் பல்சர் 125 மாடல் வந்துள்ளது.

பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஒட்டுமொத்த தோற்றத்தில் பல்சர் 150 பைக்கை போலவேதான் இருக்கிறது பல்சர் 125சிசி மாடல். ஆனால், பெட்ரோல் டேங்க் கவுல் உள்ளிட்டவை இடம்பெறவில்லை. பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் ஹவுசிங், கிராப் ரெயில் மற்றும் ரிம்களில் ஆகியவற்றில் பிரத்யேக வண்ணம் தீட்டப்பட்டு இருப்பது இதன் முக்கிய அம்சமாக இருக்கின்றது.

பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பஜாஜ் பல்சர் 125 சிசி மாடலில் 124.4 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 12 பிஎஸ் பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் பைக்கில் முன்சக்கரத்தில் 80/100/17 அளவுடைய டயரும், பின்சக்கரத்தில் 100/90/17 டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கின் ஸ்டான்டர்டு மாடலில் முன்சக்கரத்தில் 170 மிமீ டிரம் பிரேக்கும், பின்சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. டிஸ்க் பிரேக் மாடலில் முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன. காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் க்ளிப் ஆன் ஹேண்டில்பார், அதிர்வுகளை குறைக்கும் கவுண்ட்டர் பேலன்சர் மற்றும் கிக் ஸ்டார்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் பைக்கின் ஸ்டான்டர்டு மாடல் ரூ.64,000 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.66,618 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. பல்சர் 150 மாடலைவிட ரூ.5,000 குறைவான விலையில் வந்துள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் பைக் ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி மாடலின் சந்தையை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், பல்சர் 150 பைக் வெறும் 5,000 ரூபாய் மட்டுமே கூடுதல் விலையில் இருப்பதால், அதுவே சிறந்த தேர்வாக படுகிறது.

Article Published On: Wednesday, August 14, 2019, 13:17 [IST]
English summary
Bajaj Auto has launched the new Pulsar 125 Neon in India in two variants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+