புது அவதாரம் எடுக்கும் பஜாஜ் பல்சர்: ரசிகர்களுக்கு இன்ப செய்தி வெளியிட்ட ராஜீவ் பஜாஜ்...!
பஜாஜ் நிறுவனத்தின் இயக்குநரான ராஜீவ் பஜாஜ், பல்சர் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் மிகவும் பிரபலமான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம், தனது புகழ்வாய்ந்த பல்சர் வரிசையில் புத்தம் புதிய மாடல் மோட்டார்சைக்கிள் ஒன்றை இந்தியாவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை எகனாமிக்டைம்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

நம் ஊர் இளசுகளின் மனதை கொள்ளைக்கொண்ட மாடலான பல்சர் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற மாடலாக இருந்து வருகிறது. பல்சர் மாடலை முதல்முறையாக பஜாஜ் நிறுவனம் கடந்த 2001ம் ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. அவ்வாறு கடந்த 18 ஆண்டுகளாக இளைஞர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து வருகிறது பல்சர்.

இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் பேசியதாவது,
"பஜாஜ் நிறுவனம் பஜாஜ் சிடி100, பிளாட்டினா மற்றும் பல்சர் ஆகிய மாடல்களில் ஓர் குறிப்பட்ட மாற்றத்தைச் செய்ய இருக்கிறது. இந்த மாற்றத்திற்கு புதிய ஸ்மார்ட்டான ஐடியாக்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆகையால், பஜாஜ் சிடி100, பிளாட்டினா மற்றும் பல்சர் ஆகிய ஒவ்வொரு மாடல்களிலும் ஓர் தனித்துவமான புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட உள்ளன. அவ்வாறு, கொடுக்கப்படும் புதிய மாற்றம் வாடிக்கையாளர்களை நிச்சயமாக கவரும் இருக்கும். மேலும், இந்த புதிய மாற்றங்கள் மிக மிக புதுமையானதாக இருக்கும்" என்றார்.

இதனால், பஜாஜ் நிறுவனத்தின் புதிய மாடல் பல்சர், பிளாட்டினா, சிடி100 ஆகிய மோட்டார்சைக்கிள்கள் மிகவும் அற்புதமான சில மாற்றங்களும் வருகின்ற ஜூன் மாத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களை 2020ம் ஆண்டில் வெளியிட திட்டம் தீட்டி வரும் நிலையில், பஜாஜ் அறிவிப்பு போட்டி நிறுவனங்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இந்த அறிவிப்பினால், பஜாஜ் பல்சர் மற்றும் பிளாட்டினா, சிடி 100 மோட்டார்சைக்கிள்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உரைந்தள்ளனர். மேலும், புதிதாக அறிமுகமாக இருக்கும் இந்த பைக்குகள் புதிய பாதுகாப்பு மற்றும் மாசுகட்டுப்பாட்டு தரத்திற்கு உருவாகும் கூறப்படுகிறது.

அண்மையில், பஜாஜ் நிறுவனம் அதன் புகழ்பெற்ற பல்சர் 180 மாடலை விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், 180-இன் உற்பத்தியையும் ஓரிரு மாதங்களில் நிறுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. பஜாஜின் இந்த திடீர் முடிவிற்கு பல்சர் 180எஃப் என்ற புதிய மாடல் வருகையை காரணம் என்று பரவலாக கூறப்பட்டது. இதனால், பல்சர் 180 ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்திருந்தனர் என்றே கூறலாம்.

இந்நிலையில், ராஜீவ் பஜாஜ் அறிவித்திருக்கும் இந்த புதிய தகவல் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பல்சர் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகள் அனைவரின் பார்வையும் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக இருக்கிற இந்த புதிய மாடல்கள் திரும்பும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








