புதிய பெனெல்லி 302எஸ் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

புதிய பெனெல்லி 302எஸ் பைக் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பெனெல்லி 302எஸ் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இந்தியாவில் புதிய கூட்டணியில் வர்த்தகத்தை மீண்டும் துவங்கி இருக்கும் பெனெல்லி நிறுவனம் 502 அட்வென்ச்சர் ரக டூரர் பைக்குகளையும், லியோன்சினோ என்ற ஸ்க்ராம்ப்ளர் மாடல்களையும் அறிமுகம் செய்து இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய பெனெல்லி 302எஸ் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இந்த நிலையில், அடுத்ததாக 302எஸ் பைக்கையும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் பெனெல்லி நிறுவனத்திடம் உள்ளது. இதனிடையே, 2020 மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய பெனெல்லி 302எஸ் பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 4,299 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.05 லட்சம்) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய பெனெல்லி 302எஸ் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

முந்தைய மாடலைவிட பல்வேறு விதத்திலும் இந்த புதிய 302எஸ் பைக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முழுமையான எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை புதிய அம்சங்கள். மற்றபடி, டிஎன்டி 300 பைக்கின் டிசைன் தாத்பரியங்களை அதிகம் பார்க்க முடிகிறது.

புதிய பெனெல்லி 302எஸ் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இந்த புதிய பைக்கில் பேரலல் ட்வின் சிலண்டர்கள் கொண்ட 300 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 37.5 எச்பி பவரையும், 25.62 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்ததும். அதாவது, டிஎன்டி 300 பைக்கைவிட அதிக சக்திவாய்ந்த மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய பெனெல்லி 302எஸ் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

புதிய பெனெல்லி 302 எஸ் பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ இன்வெர்டெட் ஃபோர்க்குளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 260 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் ட்வின் பிஸ்டன் காலிபர்களுடன் கூடி சிங்கிள் டிஸ்க் பிரேக் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.

புதிய பெனெல்லி 302எஸ் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

அமெரிக்காவில் இந்த புதிய பெனெல்லி 302 எஸ் பை் மாடலானது வெள்ளை, கருப்பு, சிவப்பு மற்றும் இளம் பச்சை வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய பெனெல்லி 302எஸ் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய பெனெல்லி 302 எஸ் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெனெல்லி டிஎன்டி 300 பைக்கிற்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும். இந்த பைக் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 14, 2019, 14:05 [IST]
English summary
As per the speculations, All new Benelli 302S bike could be launched in India by next year.
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+