பவர்ஃபுல் பெனெல்லி லியோன்சினோ 800 பைக் அறிமுகம்!

பெனெல்லி லியோன்சினோ குடும்ப வரிசையில் சக்திவாய்ந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பவர்ஃபுல் பெனெல்லி லியோன்சினோ 800 பைக் அறிமுகம்!

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் கூடிய பெனெல்லி லியோன்சினோ பைக் மாடல்கள் வாடிக்கையாளர்களை வசியம் செய்து வருகின்றன. அண்மையில் பெனெல்லி லியோன்சினோ வரிசையில் 250 சிசி மற்றும் 500 சிசி ஆகிய பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

பவர்ஃபுல் பெனெல்லி லியோன்சினோ 800 பைக் அறிமுகம்!

இந்த நிலையில், லியோன்சினோ வரிசையில் புதிய 800 சிசி மாடல் இத்தாலியில் நடந்து வரும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் மாடலானது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

பவர்ஃபுல் பெனெல்லி லியோன்சினோ 800 பைக் அறிமுகம்!

லியோன்சினோ 500 மாடலின் டிசைன் அம்சங்கள் இந்த பைக்கிலும் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், 17 அங்குல சக்கரங்கள், ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் 15 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

பவர்ஃபுல் பெனெல்லி லியோன்சினோ 800 பைக் அறிமுகம்!

புதிய பெனெல்லி லியோன்சினோ 800 பைக்கில் 754 சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 81.6 பிஎச்பி பவரையும், 67 என்எம் டார்க் திறனையும் வெளிப்டுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி இந்த பைக்கில் நிரந்தர அம்சமாக உள்ளது.

பவர்ஃபுல் பெனெல்லி லியோன்சினோ 800 பைக் அறிமுகம்!

இந்த பைக்கில் புதிய ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் மர்சோச்சி 53 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முன்புறத்தில் 4 பிஸ்டன் மோனோ பிளாக் காலிபர்களுடன் கூடிய 320 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. பின்புறத்தில் டியூவல் பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 260 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.

பவர்ஃபுல் பெனெல்லி லியோன்சினோ 800 பைக் அறிமுகம்!

பெனெல்லி லியோன்சினோ 250 மற்றும் 500 மாடல்களை தொடர்ந்து இந்த புதிய லியோன்சினோ 800 சிசி மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு இந்த பைக் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, November 7, 2019, 11:47 [IST]
English summary
Italian bike maker Benelli has unveiled new Leoncino 800 bike at EICMA 2019 motorcycle show in Italy.
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+