புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

புதிய பைக்கை ஓட்டி வந்த இளைஞருக்கு போலீஸார் ரூ. 23,500-க்கான அபராதத் தொகையை வழங்கியுள்ளனர். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

நாட்டில் அதிகரித்தும் வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் பல்வேறு பிரச்னைகள் புதிது புதிதாக உருவாகிய வண்ணம் உள்ளன.

அதில், மிகப் பெரிய பிரச்னையாக விபத்துகளே இருக்கின்றன. இது, வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவாறு நாள்தோறும் அதிகரித்தவாறு இருக்கின்றது.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

அதேசமயம், விபத்துகள் அதிகரிப்பதற்கு வாகன ஓட்டிகள் முறையாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் செல்வதே முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆகையால், போக்குவரத்து விதிமீறல்கள் என்ற ஓர் செயலே இல்லாத இந்தியாவை உருவாக்கும் விதமாக மத்திய அரசு புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை அண்மையில் நடைமுறைக்குக் கொண்டுவந்தது.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

இது, கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 1) முதல் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டதை செயல்படுத்துவதில் ஒரு சில மாநிலங்கள் சிக்கலைச் சந்தித்துள்ளன. அந்தவகையில், குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் இதுகுறித்த வரைவு அறிக்கையை தயார் செய்து வருகின்றன.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

அதேசமயம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் புதிய உயர்த்தப்பட்ட அபராத திட்டத்தை மாநிலத்தில் அமலுக்குக் கொண்டு வர மாட்டோம் என திட்ட வட்டமாக அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பிள்ளையார் சுழியிட்ட மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கின்றது.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

முதன் முதலில் இத்திட்டத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மற்ற சில மாநிலங்கள் இதைப் பின்தொடர ஆரம்பித்துள்ளன.

இருப்பினும், சில மாநிலங்கள் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் புதிதாக வாங்கிய பைக்கை ஓட்டிச் சென்ற ஓர் இளைஞருக்கு, அம்மாநில போக்குவரத்து போலீஸார் ரூ. 23,500-க்கான அபராதத் தொகையை, புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி வழங்கியுள்ளனர்.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

ஹரியானா மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் சோனு. இவர், நேற்று (வியாழக்கிழமை) தலைநகர் டெல்லியில் உள்ள ஹிசார்-சிர்சா சாலையில், அண்மையில் வாங்கிய புதிய பைக்கில் சென்றுள்ளார். இந்த பைக்கில், இன்னும் பதிவெண் ஒட்டப்படவில்லை என கூறப்படுகின்றது.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

ஆகையால், இந்த பைக்கை மடக்கிய போலீஸார், ஏன் பைக்கில் பதிவெண் ஒட்டவில்லை என கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு அவர், தான் சமீபத்தில்தான் பைக்கை வாங்கியதாகவும், இதனை இன்னும் பதவி செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, வாகனத்தில் முறையாக சான்று இல்லாத காரணத்தாலும், பதிவெண் இல்லாமல் பைக்கை இயக்கிய குற்றத்திற்காகவும் அவருக்கு ரூ. 23,500-க்கான அபராதத்திற்கான செல்லாண் வழங்கப்பட்டது.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

இதுபோன்று, அதிக அபராதம் கொண்ட செல்லாணை டெல்லி போலீஸார் வழங்குவது முதல் முறையல்ல. முன்னதாக இதேபோல போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட தினேஷ் மதன் என்ற இளைஞருக்கு ரூ. 23 ஆயிரத்திற்கான அபராதச் செல்லாண் வழங்கப்பட்டது.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

அவருக்கு கொடுக்கப்பட்ட செலாண் விவரம் பின்வருமாறு:

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக்கை இயக்கியது.

பதிவு சான்று இல்லாமல் இயக்கியது.

இன்சூரன்ஸ் காலாவதி.

காற்று மாசு.

தலைக் கவசம் அணியாமல் பைக்கை இயக்கியது. உள்ளிட்ட பல விதிமீறல்களின்கீழ் அவருக்கு அபராதம் வழங்கப்பட்டது. ஆகையால், தனக்கு வழங்கப்பட்ட அபராதம் தன்னுடைய வாகனத்தைவிட அதிகமாக இருப்பதாக கூறி, இருசக்கர வாகனத்தை போலீஸாரிடமே அவர் ஒப்பைடத்து விட்டதாக கூறப்படுகின்றது.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

இதேபோன்று, தனது பைக்கை விடை அதிகளவிலான அபராதத் தொகையை வழங்கியதாக, போதையில் ஆசாமி ஒருவர், அவரது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை போலீஸார் கண்கள் முன்பே எரித்து நாசமாக்கினார். இச்சம்பவமும் டெல்லியில்தான் அரங்கேறியுள்ளது.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்த இந்த திட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்மையில் ஒப்புதல் பெற்றது. இதைத்தொடர்ந்து, தற்போது நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

"எங்களின் நோக்கம் அதிக தொகையை கட்டணமாக வசூலிப்பது இல்லை. போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வைப்பதே" என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பைக்கையும் விட்டு வைக்காத போலீஸார்... அபராதம் எவ்வளவு தெரிஞ்சா பைக் வாங்குற ஆசையே போய்விடும்!

மத்திய அரசின் இந்த அதிரடி திட்டம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விரைவில் பலர் தங்களது சொந்த வாகனங்களை விற்று விட்டு, பொது பயன்பாட்டில் உள்ள வாகனங்களை நோக்கி மக்கல் நகரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Bike Gets Rs 23,500 Challan For Without No Plate Ride. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X