புதிய பிளாக்ஸ்மித் பி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு!

புதிய பிளாக்ஸ்மித் பி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பிளாக்ஸ்மித் பி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு!

சென்னையை சேர்ந்த பிளாக்ஸ்மித் நிறுவனம் பி-2 என்ற பெயரில் வினோதமான வடிவமைப்புடன் பிரம்மாண்ட எலெக்ட்ரிக் பைக் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், அடுத்ததாக பி-2 எலெக்ட்ரிக் பைக்கின் அடிப்படையிலான புதிய பி-3 என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் டீசரையும் வெளியிட்டு இருக்கிறது.

புதிய பிளாக்ஸ்மித் பி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு!

பி-3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது பி-2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்றே வடிவமைப்பை பெற்றுள்ளது டீசர் மூலமாக தெரிய வருகிறது. அந்த நிறுவனத்தின் இணையதளத்திலும் இது பட்டியலிடப்பட்டுள்ளது.

புதிய பிளாக்ஸ்மித் பி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு!

பிளாக்ஸ்மித் பி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முகப்பில் பிரம்மாண்டமான அப்ரான் மற்றும் சைடு பேனல்கள் இடம்பெற்றுள்ளன. முன்புற அப்ரான் பகுதியிலேயே ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது. பெரிய விண்ட்ஸ்க்ரீன் கண்ணாடியும் பொருத்தப்பட்டுள்ளது. பழமையான ஸ்கூட்டர்களை பிரதிபலிக்கும் விதத்தில், பக்கவாட்டு பேனல்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய பிளாக்ஸ்மித் பி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு!

இந்த ஸ்கூட்டரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. முழுமையான டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்ப்டடுள்ளது. இதில், பேட்டரியில் இருக்கும் மின்திறன் அளவு, எவ்வளவு தூரம் பயணிக்கலாம் போன்ற விபரங்களையும், வேகம், நேவிகேஷன் உள்ளிட்ட தகவல்களையும் பெற முடியும்.

புதிய பிளாக்ஸ்மித் பி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு!

புதிய பிளாக்ஸ்மித் பி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5kW ஏசி மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதிகபட்சமாக 120 கிமீ வேகம் வரை செல்லும்.

புதிய பிளாக்ஸ்மித் பி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு!

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணிநேரம் பிடிக்கும். இதில், இரண்டு பேட்டரிகள் கொடுக்கப்பட்டு இருப்பதால், அதிகபட்சமாக 240 கிமீ தூரம் வரை கூட பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

புதிய பிளாக்ஸ்மித் பி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு!

புதிய பிளாக்ஸ்மித் பி2 எலெக்ட்ரிக் பைக்கும், பி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல்கள் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதன் வினோதமான வடிவமைப்பு வாடிக்கையாளர்களை எவ்வாறு கவரும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Article Published On: Friday, August 30, 2019, 11:09 [IST]
English summary
Chennai-based electric two-wheeler manufacturer Blacksmith has teased a new electric scooter model now and it will be launched in India by next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+