புதிய பிஎம்டபிள்யூ எஃப்-850 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எஃப் 850 ஜிஎஸ் அட்வென்ச்சர் டூரர் ரக பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பிஎம்டபிள்யூ எஃப்-850 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

நகர்ப்புறம், ஆஃப்ரோடு மற்றும் சாகச பயணங்களுக்கு உகந்த அம்சங்கள் கொண்ட இலகு வகை 850சிசி மாடல் என்பது இதன் முக்கிய சிறப்பம்சம். இந்தியாவில் ஸ்டைல் ராலி பேக்கேஜ் என்ற வேரியண்ட்டில் மட்டுமே புதிய பிஎம்டபிள்யூ எஃப்-850 ஜிஎஸ் பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எஃப்-850 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த பைக்கில் 853சிசி பேரலல் ட்வின் வாட்டர் கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 86 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ எஃப்-850 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ எஃப்850 ஜிஎஸ் பைக்கில் முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் உள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் 43 மிமீ இன்டவெர்டட் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ப, இரண்டிலுமே அட்ஜெஸ்ட் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய பிஎம்டபிள்யூ எஃப்-850 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 305 மிமீ விட்டமுடைய இரண்டு டிஸ்க்குகள் கொண்ட பிரேக்குகளும், பின்புறத்தில் 265 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எஃப்-850 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல், சுவிட்சபிள் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், கியர் ஷிஃப்ட் அசிஸ்ட், இரண்டு டிரைவிங் மோடுகள், 6.5 அங்குல டிஎஃப்டி திரை மற்றும் புளூடூத் இணஐப்பு வசதியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எஃப்-850 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த பைக்கிற்கு ரூ.15.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கவாஸாகி வெர்சிஸ் 650, சுஸுகி வி - ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி, டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

புதிய பிஎம்டபிள்யூ எஃப்-850 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த பைக்கின் மூலமாக பிரிமீயம் அட்வென்ச்சர் ரக மார்க்கெட்டில் சந்தையை விரிவாக்கம் செய்துள்ளதாக பிஎம்டபிள்யூ மோட்டோராட் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஹான்ஸ் க்ரிஸ்டியன் பார்டெல்ஸ் தெரிவித்துள்ளார். பைக் ரைடர்கள் உலகின் எந்த மூலைக்கும் செல்வதற்கு இந்த பைக் உதவிபுரியும் என்றும் தெரிவித்தார்.

புதிய பிஎம்டபிள்யூ எஃப்-850 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த புதிய பைக் மாடல் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. நாட்டின் அனைத்து பிஎம்டபிள்யூ மோட்டோராட் டீலர்களிலும் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 14, 2019, 14:17 [IST]
English summary
BMW launches F 850 sports bike in India at Rs 15.4 lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+