புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!

கூடுதல் சிறப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல்களுக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. டுகாட்டி நிறுவனத்தின் குறைவான விலை மாடல்கள் என்பதுடன், தனித்துவமான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த பைக்குகள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன.

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!

கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை 500க்கும் மேற்பட்ட டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ரகத்தில் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் இருக்கின்றன.

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!

இந்தநிலையில், புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட ஸ்க்ராம்பளர் பைக் மாடல்களை டுகாட்டி நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ரகத்தில் குறைவான மாடலாக ஐகான், ஃபுல் த்ராட்டில் , கஃபே ரேஸர் மற்றும் டெசர்ட் ஸ்லெட் ஆகிய 4 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

MOST READ : இனி பைக்கர்கள் மழையைக் கண்டு பயப்பட வேண்டாம்: ஹெல்மெட்டிற்கும் வந்துவிட்டது வைப்பர்...!

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!

தோற்றத்தில் பழைய மாடல்களை ஒத்திருந்தாலும் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வட்ட வடிவிலான ஹெட்லைட்டுடன் எல்இடி பகல்நேர விளக்குகள் உள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் கூடுதலாாக எரிபொருள் அளவு குறித்த தகவல் மற்றும் கியர் இண்டிகேட்டர் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கில் பயன்படுத்தப்படும் சுவிட்ச்கியர் இடம்பெற்றுள்ளது.

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!

மிக சொகுசான பயணத்தை வழங்கும் வகையில் உயர்தர இருக்கைகள் மற்றும் சாஃப்ட் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனின் இறுக்கம் இலகுவாக்கப்பட்ட போதிலும், கையாளுமை சிறப்பாக இருக்கும். பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!

சேஸீயும், எஞ்சினும் தக்க வைக்கப்பட்டுள்ளன. புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மாடல்களில் 803சிசி எல்-ட்வின் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 73 பிஎச்பி பவரையும், 67 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ : போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்களாக களமிறங்கும் சக்தி வாய்ந்த ஹீரோ பைக்குகள்: விற்பனை தேதி!

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் மாடலுக்கு ரூ.7.89 லட்சமும், கஃபே ரேஸர் மாடலுக்கு ரூ.9.78 லட்சமும், டெசர்ட் ஸ்லெட் மாடலுக்கு ரூ.9.93 லட்சமும், ஃபுல் த்ராட்டில் மாடலுக்கு ரூ.8.92 லட்சமும் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஐகான் மாடல் ரூ.56,000 வரையிலும், டெசர்ட் ஸ்லெட் ரூ.43,000 வரையிலும், கஃபே ரேஸர் மற்றும் ஃபுல் த்ராட்டில் ஆகிய மாடல்கள் ரூ.38,000 வரை விலை உயர்ந்துள்ளது.

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!

புதிய டுகாட்டி ஸ்க்ராம்பளர் பைக் மாடல்கள் தாய்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ட்ரையம்ஃப் நிறுவனத்தின் ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
New Ducati Scrambler Range Launched In India.
Story first published: Friday, April 26, 2019, 14:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X