பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் அறிமுகமாகும் கேடிஎம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அடுத்த புதிய தயாரிப்பான சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்திய சந்தையில் விற்பனை செய்ய ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் நமது தளத்திற்கு கிடைத்துள்ள தகவலின்படி பஜாஜ் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமல்லாமல் இதை விட அதிக திறன் வாய்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறதாம். இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் அடுத்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2021ஆம் ஆண்டின் துவக்கத்திலோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பஜாஜ் நிறுவனத்தின் சார்பில் வெளியாக போவதில்லை. மாறாக, கேடிஎம் அல்லது ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இவ்விரு நிறுவனங்களில் இருந்தும் மிக அதிக திறனை கொண்ட பைக்குகள் தான் பெரும்பாலும் வெளியிடப்படுகின்றன. இதனால் இந்நிறுவனங்களில் எந்த ஒன்றில் இருந்து அறிமுகமானாலும் இதே செயல்முறையில் தான் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டிருக்கும்.

இந்த ப்ராண்ட் மாற்றம் மட்டுமின்றி, புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர், விலை என அனைத்தும் மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்ட அதே ஃபிளாட்ஃபாரத்தில் இந்த சேத்தக்கை விட அப்டேட்டாக இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ்-ன் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இதன் டிசைன் அமைப்பு வெஸ்பா ஸ்கூட்டரை காப்பியடித்தாற்போல் உள்ளது என கூறிவருகின்றனர்.

இவ்வளவு ஏன், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவர் ப்ரதாப் போஸ் கூட இந்த பைக்கின் டிசைனை இணையத்தில் நக்கலடிக்க, பஜாஜ் நிறுவனர் ராஜிவ் பஜாஜ், இந்த எலக்ட்ரிக் பைக்கின் அறிமுகத்தின் போது போஸை கடுமையாக சாடியிருந்தார். இதுகுறித்த முழுமையான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தகவல்களை மிக குறைவான அளவில் தான் பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நமக்கு தெரிந்த வரை, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்நிறுவனம் ஐபி-67 நீர் எதிர்ப்பு திறன் வாய்ந்த லித்தியம்-இரும்பு பேட்டரி அமைப்பை பொருத்தியுள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த பேட்டரியின் சிங்கிள் சார்ஜில் 90 கிமீ வரை ஸ்கூட்டரை இயக்கி செல்ல முடியும்.

ஸ்போர்ட், இகோ என இரு ரைடிங் மோட்களில் வெளியாகவுள்ள இந்த ஸ்கூட்டரின் உத்தரவாதம் மற்றுன் சர்வீஸ் கால அளவுகளை சமீபத்தில் பஜாஜ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் விரிவான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தலாம்.

தற்சமயம் சேத்தக் எலக்ட்ரிக் யாத்ராவில் கலந்து கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டர்களுக்கு துணையாக 2021ல் வெளியாகவுள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தயாரிப்பு கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் அடிப்படையில் உருவாகி வருவது பஜாஜ் நிறுவனத்தின் மிக அருமையான நகர்த்தலாகும். எப்படி இருந்தாலும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம், எந்த விதத்திலும் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை பாதிக்காத வகையில் தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications








