மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2 புதிய ஹார்லி டேவிட்சன் மாடல்கள் அறிமுகம்!
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஃபார்ட்டி எயிட் ஸ்பெஷல் மற்றும் ஸ்ட்ரீட் க்ளைடு ஸ்பெஷல் என்ற இரு மோட்டார்சைக்கிள்களும் பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் களமிறக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இரண்டு புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஃபார்ட்டி எயிட் ஸ்பெஷல் மற்றும் ஸ்ட்ரீட் க்ளைடு ஸ்பெஷல் என்ற இரு மோட்டார்சைக்கிள்களும் பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் களமிறக்கப்பட்டுள்ளது. புதிய ஃபார்ட்டி எயிட் ஸ்பெஷல் மாடல் ரூ.10.98 லட்சத்திலும், ஸ்ட்ரீட் க்ளைடு ஸ்பெஷல் ரூ.30.53 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த இரண்டு புதிய டூரர் மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு மோட்டார்சைக்கிள்களின் ஹேண்டில்பார்களும் உயர்த்தப்பட்ட அமைப்புடன் முன்னோக்கிய நிலையில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட் மோட்டார்சைக்கிளில் 1,200 சிசி வி-ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 96 என்எம் டார்க் திறனை அளிக்கும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் மாடலானது முக்கிய உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி, டிரையம்ஃப் போனிவில் ஸ்பீடு மாஸ்டர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

2019 மாடலாக வந்திருக்கும் புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் க்ளைடு ஸ்பெஷல் மோட்டார்சைக்கிளில் 1,868சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 165 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இந்த மோட்டார்சைக்கிளில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. வானிலை, நேவிகேஷன், வண்டி இயக்கம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை இந்த சாதனம் வழங்கும்.

புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் க்ளைடு ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியன் சீஃப்டெயின், ஹோண்டா கோல்டு விங் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








