ஹீரோவின் புதிய 200சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கின் வீடியோ!
ஹீரோ நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், நீண்ட காலமாக ஸ்போர்ட்ஸ் பைக் தயார்ப்பில் இறங்குவதற்கு முயற்சித்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிலேயே ஸ்போர்ட்ஸ் பைக் கான்செப்ட்டுகளை காட்சிக்கு வைத்தாலும், அவை இன்னும் தயாரிப்பு நிலை மாடலாக உருப்பெறவில்லை.

இந்தநிலையில், ஹீரோ நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. ஹீரோ HX250R கான்செப்ட் பைக்கின் அடிப்படையில் இந்த புதிய பைக் உருவாக்கப்பட்டு இருப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
முழுமையான ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது. ஹீரோ பேட்ஜ் பக்கவாட்டில் இடம்பெற்றிருக்கின்றது. இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் 199.6சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.4 எச்பி பவரையும்,, 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மேலும், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றிருக்கின்றன. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது எக்ஸ்ட்ரீம் 200ஆர் அடிப்படையிலான ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வர இருக்கிரது.

அதாவது, புதிய தலைமுறை கரீஷ்மா பைக்காக இருக்கும் என்று கருதப்படுகிறது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடல்களுக்கு அடுத்ததாக, இந்த புதிய பைக் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் பண்டிகை காலத்திற்கு முன்னதான அறிமுக பட்டியலில் இடம்பெறும் என்று தெரிகிறது.
Source: Creepy_Pie


Click it and Unblock the Notifications








