புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் ரூ.2.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும்.

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் கூடிய புத்தம் புதிய 300சிசி பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹோண்டா நிறுவனம். இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்திாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஹோண்டா நிறுவனத்தின் பிரிமீயம் ரக பைக் மாடலாக வந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு டோக்கியோ ஆட்டோ எக்ஸ்போவில் நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே என்ற பைக் கான்செப்ட் மாடைல ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்திாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பழமையான டிசைன் தாத்பரியங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த அந்த பைக் பவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பைக்கில் 998சிசி 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து இந்த புதிய சிபி300ஆர் பைக் மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்திாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் டிசைன் பாரம்பரிய மற்றும் நவீன டிசைன் தாத்பரியங்களுடன் கலந்து கட்டிய மாடலாக உள்ளது. எல்இடி விளக்குகளுடன் கூடிய வட்ட வடிவிலான ஹெட்லைட், எல்இடி இன்டிகேட்டர்கள், குதிரை குளம்பு வடிவிலான கெய்டு லைட்டுகளுடன் முகப்பு கவர்கிறது.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்திாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 286சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 30 பிஎச்பி பவரையும், 27.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்திாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. முன்புறத்தில் 110 மிமீ அகலமுடைய டயருடன் கூடிய 17 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 150 மிமீ அகலமுடைய டயருடன் கூடிய 17 அங்குல சக்கரமும் உள்ளன.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்திாவில் விற்பனைக்கு அறிமுகம்!

முன்சக்கரத்தில் 376 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இரண்டு சக்கரங்களுக்குமான டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இந்த பைக்கில் முக்கிய பாதுகாப்பு அம்சமாக உள்ளது.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்திாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் 10 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ஒருமுறை முழுவதுமாக பெட்ரோல் நிரப்பினால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்திாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் எல்சிடி திரையுடன் கூடிய முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பைக்கின் நிலைத்தன்மையை கண்காணித்து கூறும் ஐஎம்யூ சாதனமும் இந்த பைக்கில் உள்ளது.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்திாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் சிவப்பு மற்றும் மேட் ஃபினிஷ் கொண்ட சாம்பல் வண்ணத்தில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்திாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் ரூ.2.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும்.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்திாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இது 300- 400சிசி ரகத்தில் கேடிஎம் 390 ட்யூக் உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 8, 2019, 13:59 [IST]
English summary
All New Honda CB300R Launched in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+