ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நடுத்தர வகையை சேர்ந்த இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இதுவரை விற்பனையில் இருந்த ஹோண்டா சிபிஆர்650எஃப் பைக்கிற்கு மாற்றாக புதிய சிபிஆர்650ஆர் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்கிற்கு நாடுமுழுவதும் புதிதாக திறக்கப்படும் 22 விங் வேர்ல்டு ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரூ15,000 முன்பணத்துடன் இந்த பைக்கிற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஹோண்டா சிபிஆர்650எஃப் பைக் ரூ.7.37 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் ரூ.7.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

வடிவமைப்பை பொறுத்தவரையில் ஹோண்டா ஃபயர்பிளேடு சூப்பர் பைக்கை ஒத்திருக்கிறது. இருப்பினும், சில மாறுதல்களுடன் வந்துள்ளது. மேலும், இருக்கை அமைப்பு உள்ளிட்டவை சிறப்பானதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 649சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும்.

ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச், டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் வீல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை உள்ளன. இந்த பைக்கின் முன்புறத்தில் ஷோவா 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கில் 310 மிமீ ட்வின் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய பைக் இந்தியாவில் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாத இறுதியில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2019, 17:28 [IST]
English summary
Honda Motorcycles & Scooters India has launched the CBR650R in the Indian market. The new Honda CBR650R comes with a price tag of Rs 7.70 lakh, ex-showroom (India). The CBR650R replaces the CBR650F in the Indian market, which was recently discontinued.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+