செம ஸ்டைல்... புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் வெளியீடு!

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் புதிய ஸ்வர்ட்பிளேன் 200 பைக் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் படங்கள், சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் வெளியீடு!

கேடிஎம் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் ஹஸ்க்வர்னா நிறுவனம் விரைவில் இந்தியாவில் தனது புதிய பைக் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹஸ்க்வர்னா பைக்குகள் அனைத்தும் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் கேடிஎம் ட்யூக் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல்களாக இருக்கும்.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் வெளியீடு!

கடந்த வார இறுதியில் கோவாவில் நடந்த இந்திய பைக் வீக் திருவிழாவில் ஹஸ்க்வர்னா நிறுவனம் ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 ஆகிய இரண்டு பைக் மாடல்களை இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது. கேடிஎம் 250 ட்யூக் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மாடல்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் வெளியீடு!

வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த புதிய ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், அடுத்து ஒரு புதிய ஸ்வர்ட்பிளேன் பைக்கை ஹஸ்க்வர்னா வெளியிட்டு இருக்கிறது.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் வெளியீடு!

ஹஸ்க்வர்னா இணையதள பக்கத்தில் ஸ்வர்ட்பிளேன் 200 என்ற புதிய மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பைக் கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாடலாக வர இருக்கிறது. இது உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்லும்.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் வெளியீடு!

கேடிஎம் 200 ட்யூக் பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 200 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக்கிலும் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் 26 எச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கிறது. இந்த எஞ்சின் சிறிய மாறுதல்களுடன் ஸ்வர்ட்பிளேன் 200 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் வெளியீடு!

அண்மையில் இந்தியாவில் வெளியிடப்பட்ட புதிய ஸ்வர்ட்பிளேன் 250 பைக்கில் இருக்கும் அதே அலாய் வீல்கள்தான் இந்த புதிய மாடலிலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், ஸ்வர்ட்பிளேன் 401 பைக்கில் இருக்கும் வயர் ஸ்போக் வீல்கள் இந்த மாடலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் வெளியீடு!

அதேநேரத்தில், ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 பைக்கில் பக்கவாட்டில் சைலென்சர் குழாய் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஸ்வர்ட்பிளேன் 200 பைக்கில் எஞ்சினுக்கு கீழ்பகுதியில் பொருத்தப்பட்டு இருப்பது முக்கிய மாற்றமாக இருக்கும்.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் வெளியீடு!

அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய ஸ்வர்ட்பிளேன் 200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்வர்ட்பிளேன் 250 பைக்கைவிட விலை குறைவாக இருக்கும் என்பதால், கூடுதல் வாடிக்கையாளர் வட்டத்தை பிடிப்பதற்கான வாய்ப்பை ஹஸ்க்வர்னா நிறுவனம் பெற முடியும்.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் வெளியீடு!

கேடிஎம் 200 ட்யூக் பைக்கைவிட ரூ.10,000 வரை கூடுதல் விலையில் ஸ்வர்ட்பிளேன் 200 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதாவது, கேடிஎம் பைக் மாடல்களைவிட பிரிமீயம் பிராண்டாக நிலைநிறுத்துவதற்கான திட்டம் உள்ளதாக தெரிகிறது.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் வெளியீடு!

கேடிஎம் பைக்குகள் வழக்கத்திலிருந்து மாறான தனித்துவமான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், தொழில்நுட்ப அம்சங்களுடன் மிக சவாலான விலையில் வந்ததால், பெரிய ஹிட் அடித்தது. அதே பாணியில் மிகவும் தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் ஹஸ்க்வர்னா பைக்குகளும் இந்தியர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 10, 2019, 13:31 [IST]
English summary
Swedish bike manufacuturer, Husqvarna has revealed new Svartpilen 200 bike on their global website and it is likely to be launched in India by second half of next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+