புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகமானது!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் பொது பார்வைக்கு வந்துள்ளது. இத்தாலியில் நடந்து வரும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த பைக் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகமானது!

டக்கார் ராலி மூலமாக பைக் பந்தய ரசிகர்களை நெஞ்சை கொள்ளையடித்த, கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கின் டிசைன் அம்சங்களை மனதில் வைத்தே இந்த புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சாகசப் பைக் பிரியர்களை கவரும் அத்துனை அம்சங்களையும் இந்த பைக் வழங்கும்.

நீண்ட தூர பயணம், ஆஃப்ரோடு சாகசங்கள் என அனைத்து விதமான பயணங்களுக்கும் ஏற்ற மூர்க்கத்தனமான ஒரு பைக் மாடலாக கேடிஎம் 390 அட்வென்ச்சர் இருக்கும் என்று நம்பலாம். கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் பல முக்கிய உதிரிபாகங்களை இந்த பைக் பங்கிட்டுக் கொண்டுள்ளது.அதேநேரத்தில், குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் அட்வென்ச்சர் டூரர் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்

இந்த பைக்கில் 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 44 எச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் அதே இயக்க நிலைகளுடன் இந்த பைக் வந்துள்ளது. எஞ்சினில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

இந்த பைக்கின் முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் முன்புற மற்றும் பின்புற சஸ்பென்ஷன்களைவிட இந்த பைக்கின் சஸ்பென்ஷன் கூடுதல் டிராவல் நீளம் கொண்ட ஃபோர்க்குகளுடன் வந்துள்ளது.

 புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர்

கேடிஎம் 390 ட்யூக் பைக்கைவிட இந்த பைக்கின் வீல் பேஸ் கூடுதலாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆம். இந்த பைக்கில் 1,43 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ ஆக உள்ளது.

இந்த புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் 14.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக்கில் சில கூடுதல் அம்சங்கள் மூலமாக எடை 158 கிலோவாக உள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் 100/90-19 அளவுடைய டயரும், பின்புறத்தில் 130/80-17 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் டிரைவிங் மோடுகளை இந்த சாதனம் மூலமாக கட்டுப்படுத்துவதுடன் பல்வேறு தகவல்களையும் பெற முடியும். இந்த பைக்கிற்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கேரியர், பொருட்கள் வைப்பதற்கான பெட்டி ஆகியவை வழங்கப்படும் என தெரிகிறது.

நம் நாட்டில் இந்த புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் நீண்ட காலமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் கோவாவில் நடைபெற இருக்கும் இந்திய பைக் வீக் திருவிழாவின் மூலமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரூ.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 5, 2019, 21:31 [IST]
English summary
KTM has unveiled all new 390 Adveture bike in ongoing EICMA motorcycle show in Italy.
மேலும்... #கேடிஎம்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+