அதிசெயல்திறன்மிக்க புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் அறிமுகம்!

இத்தாலியில் நடந்து வரும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புத்தம் புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்கள், கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அதிசெயல்திறன்மிக்க புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் அறிமுகம்!

கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் குடும்ப வரிசையில் பல்வேறு சிசி திறன் கொண்ட மாடல்கள் விற்பனையில் உள்ளன. இந்த நேக்கட் ரக வடிவமைப்பு கொண்ட ட்யூக் பைக் மாடல்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்தியாவிலும் ட்யூக் வரிசை பைக் மாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு நீங்கள் அறிந்ததே.

அதிசெயல்திறன்மிக்க புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் அறிமுகம்!

இந்த நிலையில், ட்யூக் வரிசையில் தற்போது புதிய மாடல் ஒன்றை கேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய மாடல் கேடிஎம் 890 ட்யூக் ஆர் என்ற பெயரில் வந்துள்ளது. தற்போது விற்பனையில் உள்ள 790 ட்யூக் பைக்கைவிட அதிக சிறப்பம்சங்களுடன் இந்த பைக் வந்துள்ளது.

அதிசெயல்திறன்மிக்க புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் அறிமுகம்!

புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. புளூடூத் இணைப்பு வசதி மூலமாக ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்ள முடியும்.

அதிசெயல்திறன்மிக்க புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் அறிமுகம்!

புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 890 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 790 ட்யூக் பைக்கைவிட இந்த புதிய மாடல் 15 பிஎச்பி கூடுதல் பவரையும், 14 என்எம் கூடுதல் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அதிசெயல்திறன்மிக்க புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் அறிமுகம்!

புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக்கில் முழுவதுமாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடைய WP அப்பெக்ஸ் சிஸ்டம் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் முன்புறத்தில் பிரெம்போ 320 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது.

அதிசெயல்திறன்மிக்க புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் அறிமுகம்!

இந்த புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் விரைவில் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இப்போதைக்கு வராது என்று கருதப்படுகிறது. ஏனெனில், அண்மையில்தான் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதிசெயல்திறன்மிக்க புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் அறிமுகம்!

மொத்தமாக 100 யூனிட்டுகள் விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் பிஎஸ்-6 எஞ்சினுடன் வருமா அல்லது 890 ட்யூக் ஆர் பைக்கை கேடிஎம் விற்பனைக்கு கொண்டு வருமா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 6, 2019, 14:35 [IST]
English summary
KTM has unveiled the 890 Duke R at the ongoing EICMA 2019. The new KTM 890 Duke R is the latest addition to the brand's middle-weight segment offerings. The new KTM 890 Duke R is based on the 790 Duke and is positioned above in the brand's lineup.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+