ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஒகினவா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், இன்று பிரெய்ஸ் புரோ என்ற புதிய மாடலை களமிறக்கி உள்ளது. இந்த புதிய மாடலானது பிரெய்ஸ் மற்றும் ஐ-பிரெய்ஸ் பிளஸ் ஆகிய மாடல்களுக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஒகினவா பிரெய்ஸ் ஸ்கூட்டரில் வழங்கப்படும் அனைத்து சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கும் இந்த ஸ்கூட்டரில் முக்கிய மாற்றமாக, லீட் ஆசிட் பேட்டரிக்கு பதிலாக லித்தியம் அயான் பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை தனியாக கழற்றி எளிதாக சார்ஜ் ஏற்ற முடியும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 2 முதல் 3 மணிநேரம் பிடிக்கும். இந்த ஸ்கூட்டரை ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது 110 கிமீ தூரம் வரையிலும், ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டும்போது 90 கிமீ வரையிலும் பயணிக்க முடியும்.

ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1kW பிஎல்டிசி வாட்டர்புரூப் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் 2kW லித்தியம் அயான் பேட்டரியிலிருந்து மின் மோட்டாருக்கான மின் திறன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் மின் மோட்டார் அதிகபட்சமாக 2,500 வாட்ஸ் திறனை வெளிப்படுத்தும்.

ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டர் ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது அதிகபட்சமாக 35 கிமீ வேகம் வரையிலும், ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டும்போது அதிகபட்சமாக 50 கிமீ வேகம் வரையிலும் செல்லும். 15 டிகிரி சரிவான சாலையிலும் எளிதாக செல்லும் திறன் படைத்தது.

ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஆன்ட்டி தெஃப் அலாரம், கீ லெஸ் இக்னிஷன், பார்க்கிங் லாட்டில் ஸ்கூட்டரை எளிதாக கண்டறியும் நுட்பம், மொபைல் சார்ஜர், பின்புறமாகவும் செல்லும் வசதிகள் உள்ளன.

ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிளாஸி ரெட் பிளாக் மற்றும் கிளாஸி ஸ்பார்க்கிள் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.71,990 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சாலை அவசர உதவித் திட்டம், பழுதடைந்தால் இரண்டு முறை இலவசமாக சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லும் வசதிகளும் அளிக்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, September 5, 2019, 16:46 [IST]
English summary
Okinawa Scooters has launched PraisePro electric scooter in India with Lithium ion battery pack.
மேலும்... #ஒகினவா #okinawa
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+