கூடுதல் வசதிகளுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் பைக். விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

 கூடுதல் வசதிகளுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

அட்வென்ச்சர் டூரர் பைக்குகளில் மிக குறைவான விலையில் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் உள்ளது. குறிப்பாக, இமயமலையில் சாகசப் பயணம் செய்வோரின் முதல் சாய்ஸாக உள்ளது. இதற்காகவே, இந்த பைக் மாடலை ராயல் என்ஃபீல்டு உருவாக்கியது.

 கூடுதல் வசதிகளுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

இந்தநிலையில், ஹிமாலயன் பைக்கில் இருக்கும் 411 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் 24.5 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

 கூடுதல் வசதிகளுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட பைக் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மிக விரைவில் இந்த எஞ்சினுடன் புதிய ஹிமாலயன் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த சூழலில், பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் ஹிமாலயன் பைக்கில் சில கூடுதல் சிறப்பம்சங்களும் கொடுக்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

 கூடுதல் வசதிகளுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

புதிய பிஎஸ்-6 ஹிமாலயன் பைக்கில் அனைத்து இண்டிகேட்டர் விளக்குகளும் ஒரே நேரத்தில் எரிவதற்கான வசதியை அளிக்கும் ஹசார்டு சுவிட்ச் வசதியும், சுவிட்சபிள் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதியும் கூடுதலாக வழங்கப்பட இருக்கிறது.

 கூடுதல் வசதிகளுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

அண்மையில் நடந்து முடிந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் ஹிமாலயன் பைக் புதிய வண்ணங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ராக் ரெட், லேக் புளூ மற்றும் கிராவல் க்ரே ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளும் புதிதாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கூடுதல் வசதிகளுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

மேலும், ஹிமாலயன் பைக்கிற்கு கூடுதலாக புதிய கருப்பு வண்ணத்திலான உறுதியான பேனியர் பைகள், உறுதிமிக்க கைகளுக்கான பாதுகாப்பு ஆக்சஸெரீயும் கொடுக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கூடுதல் வசதிகளுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

இந்த கூடுதல் வசதிகள் மற்றும் புதிய வண்ணத் தேர்வுகள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கும் வாய்ப்புள்ளது. மேலும், ஏற்கனவே ஹிமாலயன் பைக்கில் இருந்த சில குறைபாடுகளும் நீக்கப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கூடுதல் வசதிகளுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

p>புதிய ஹிமாலயன் பைக்கில் முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றிருக்கும். டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்ற இருக்கிறது.

 கூடுதல் வசதிகளுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

புதிய பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி துவக்கத்தில் இந்த புதிய பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gaadiwaadi

More from DriveSpark

Article Published On: Friday, November 29, 2019, 8:40 [IST]
English summary
According to the media report, The new Royal Enfield Himalayan will get a new switchable ABS and Hazard switch features in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+