சுஸுகி அக்செஸ் 125 பிஎஸ்-6 மாடல் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் பிஎஸ்-6 மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சுஸுகி அக்செஸ் 125 பிஎஸ்-6 மாடல் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

பிஎஸ்-6 மாடல்களை அறிமுகப்படுத்துவதில் இருசக்கர வாகன நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ், வெஸ்பா, ஏப்ரிலியா நிறுவனங்களின் பிஎஸ்-6 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிஎஸ்-6 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஆயத்தமாகி உள்ளது.

சுஸுகி அக்செஸ் 125 பிஎஸ்-6 மாடல் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இந்நிலையில், 125 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிக முக்கிய சக்தியாக இருக்கும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனமும் பிஎஸ்-6 அக்செஸ் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. பிஎஸ்-6 மாடலாக மட்டுமில்லாமல், பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வர உள்ளது.

சுஸுகி அக்செஸ் 125 பிஎஸ்-6 மாடல் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

எல்இடி ஹெட்லைட், ஈக்கோ லைட் கொண்ட ஸ்பீடோமீட்டர், பேட்டரியின் திறன் குறித்து எச்சரிக்கும் வோல்டேஜ் மீட்டர் உள்ளிட்டவை கூடுதலாக இடம்பெற்றிருக்கும். இந்த புதிய மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்படுமா அல்லது அனலாக் மற்றும் டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெறுமா என்பது விரைவில் தெரியவரும்.

சுஸுகி அக்செஸ் 125 பிஎஸ்-6 மாடல் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் இயங்கும் 124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.6 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டார்க் வெளிப்படுத்தும் திறன் மட்டும் 0.02 என்எம் என்ற அளவில் சற்றே குறைந்துள்ளது. மற்றபடி எந்த மாற்றமும் இல்லை.

சுஸுகி அக்செஸ் 125 பிஎஸ்-6 மாடல் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய சுஸுகி அக்செஸ் 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் எஞ்சின் செயல்திறன் பற்றிய விபரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் பெட்ரோல் டேங்க் மூடி கொடுக்கப்பட்டு இருக்கும். மற்றபடி, அனைத்து தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

சுஸுகி அக்செஸ் 125 பிஎஸ்-6 மாடல் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய சுஸுகி அக்செஸ் 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரில் நீளமான இருக்கை அமைப்பு, வசதியான ஃபுட்போர்டு, இருக்கைக்கு கீழே பெரிய அளவிலான பொருட்கள் வைப்பதற்கான இடவசதி, ஈஸி ஸ்டார்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெறும் என தெரிகிறது யுஎஸ்பி சார்ஜர் வசதியுடன் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுஸுகி அக்செஸ் 125 பிஎஸ்-6 மாடல் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

அடுத்த மாதம் இந்த புதிய சுஸுகி அக்செஸ் 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6, யமஹா ஃபஸினோ 125, வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா நிறுவனங்களின் 125 ஸ்கூட்டர் மாடல்களுடன் போட்டி போடும். இந்த சந்தையில் இப்போது கடும் போட்டி நிலவுகிறது.

Most Read Articles
English summary
Suzuki has revealed the New Access 125 with BS6 compliant engine and it's expected to launch by January 2020.
Story first published: Tuesday, December 24, 2019, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X