புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் கோள வடிவிலான எல்இடி ஹெட்லைட், பெட்ரோல் டேங்க் அடிப்புறத்தில் புதிய டிசைனிலான கவுல்கள், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், ஸ்பிளிட் இருக்கைகள், கருப்பு வண்ண அலாய் வீல்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக்கில் முழுமையான எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இருப்பினும், ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 பைக்கில் க்ளிப் ஆன் ஹேண்டில்பார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பைக்கில் இல்லாதது குறையாக இருக்கிறது.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் அடுத்த மிக முக்கிய மாற்றமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 155 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ேளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளன. இந்த பைக்கில் முன்புறத்தில் 100/80 டயருடன் கூடிய 17 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 140/60 டயருடன் கூடிய 17 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் டைட்டான் புளூ ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் ரூ.1.02 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிட ரூ.13,000 கூடுதல் விலையில் புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய சுஸுகி ஜிக்ஸெர்155 பைக் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, கேடிஎம் ட்யூக் 125 மற்றும் யமஹா எஃப்இசட் எஸ் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். இதன் ரகத்தில் மிகச் சிறந்த தேர்வாக கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 12, 2019, 14:15 [IST]
English summary
Suzuki Motorcycles has launched the new (2019) Gixxer 155 facelift in the Indian market. The new (2019) Suzuki Gixxer 155 facelift is offered with a price tag of Rs 1 lakh, ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+