இளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது!

விரைவில் விற்பனைக்கு களமிறங்க இருக்கும் 2019 ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் ஸ்பை படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது!

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான ஜிக்ஸெர் 155 பைக்கின் 2019ம் ஆண்டு மாடல், இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது.

பல்வேறு அப்டேட்டுகளையும், சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கும் இந்த மாடல் அதன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக அண்மைக் காலங்களாக, வாகன உலகில் இந்த பைக் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

இளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது!

இந்நிலையில், 2019 சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக்கின் ஸ்பை ஒன்று கசிந்துள்ளது. இந்த ஸ்பை படத்தை @எஸ்_எஃப்__கே_ஐ_டி (@s_f__k_i_d) என்ற இன்ஸ்டாகிராம் பயனாளர் வெளியிட்டுள்ளார். தற்போது ஸ்பை செய்யப்பட்டிருக்கும் இந்த பைக், அதன் டீலர் ஷோரூம் வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், மெக்கானிக்கள் பயிற்சி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த ஸ்பை படத்தை கீழே காணலாம்...

இளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது!

முன்னதாக, சுஸுகி நிறுவனம் 2019 ஜிக்ஸெர் 155 மாடலை மிகவும் அழுகுப்படுத்தப்பட்டு மாடலாக உருவாக்கி வருவதாக தெரிவித்திருந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளியாகியிருக்கும், புதிய ஸ்பை படம் இருக்கின்றது.

மேலும், இந்த ஸ்பை படம் மூலம் தற்போது விற்பனையில் இருக்கும் சுஸுகி ஜிக்ஸெர் மாடலைக் காட்டிலும் 2019 மாடல் பல்வேறு அப்டேட்டுகளையும், அதிக சிறப்பம்சங்களைப் பெற்றதாகவும் களமிறக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது!

அந்தவகையில், பைக்கின் தோற்றம், உடற்கூறுகள் மற்றும் பாகங்கள் உள்ளிட்டவை அப்டேட் செய்யப்பட்டவையாக காட்சியளிக்கின்றது. ஆகையால், 2019 சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் புதிய வடிவிலான ஹெட்லேம்ப், சில்வர் நிறத்திலான ப்ரேமுடன் காட்சியளிக்கின்றது. இது, தற்போது விற்பனையில் இருக்கும் ஹாலோஜன் ஹெட்லேம்ப்பைக் காட்டிலும் பிரத்யேமான லுக்கை வழங்குகின்றது.

இளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது!

இத்துடன் பல்வேறு அப்டேட்டுகள் ஜிக்ஸெர் 155 பைக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், புதிய எல்இடி ரகத்திலான டெயில் லேம்ப், ஸ்டெப்பட் அப் சீட், பாடி நிறத்திலான ஸ்பிளிட் கிராப் ஹேண்டில் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது!

இதைத்தொடர்ந்து, சிறப்பான வடிவமைப்பாகவும், பைக்கிற்கு ஸ்போர்ட்ஸ் மாடல் லுக்கை அதிகம் வழங்கும் வகையிலும் பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, மிகவும் ஷார்ப்பான மற்றும் தோள்பட்ட லைன்கள் ப்யூவல் டேங்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பிரத்யேக லுக்கைப் பெற்றிருக்கும் இந்த பெட்ரோல் டேங்க் 12 லிட்டர் ப்யூவலை உள்ளடக்கிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கின் ஒட்டுமொத்த எடை 140கிலோவாக இருக்கின்றது.

இளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது!

இந்த புத்தம் புதிய ஜிக்ஸெர் 155 பைக் இரு விதமான வண்ணத்தேர்வில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், இதில் சொகுசான பயண அனுபவத்திற்காக, டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், மோனோசாக் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சிறப்பான பாதுகாப்பு வசதியாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது!

2019 சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக்கில் 159.4 சிசி திறன் கொண்ட ஏர் கூல்ட், சிங்கிள் சிலிண்டர், எஸ்ஓஎச்சி, 2 வால்வ், எஃப்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 14.1 பிஎஸ் பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 14என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது.

இளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது!

புதிய ஜிக்ஸெர் 155 பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்களை சேர்த்திருக்கும் சுஸுகி நிறுவனம், இதன் எஞ்ஜினை புதிதாக அமலுக்கு வரவிருக்கும் பிஎஸ்-6 தரத்திற்கேற்பு ட்யூன் செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆகையால், அழகூட்டப்பட்ட இந்த பைக் சுற்றுப்புறச்சூழலுக்கு பெரியளவில் கேடு விளைவிக்காது என கூறப்படுகின்றது.

இளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது!

ஜிக்ஸெர் வரிசையின் எஸ்எஃப் மாடல் பைக்குகள் அண்மையில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, அவற்றின் நேக்கட் ரக மாடல்களாக 2019 ஜிக்ஸெர் 155 மாடல் இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளது.

இளைஞர்களைக் கவர புதிய அப்டேட்டுடன் விரைவில் களமிறங்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155... ஸ்பை படம் கசிந்தது!

இந்த புதிய மாடல் ஜிக்ஸெர் யமஹா நிறுவனத்தின் எஃப்இசட் வி3.0, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 1604வி, பஜாஜ் பல்சர் 160என்எஸ் மற்றும் ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் உள்ளிட்ட பைக்குகளுடன் கடுமையான போட்டியைச் சந்திக்க இருக்கின்றது. அதற்கேற்ப வகையில், ரூ. 92 ஆயிரம் முதல் 95 ஆயிரம் வரையிலான விலையை இந்த பைக் பெற இருக்கின்றது.

Most Read Articles

English summary
2019 Suzuki Gixxer 155 Facelift Spied — India-Launch Expected Soon; To Rival The Yamaha MT-15. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X