மிரட்டலான ஸ்டைல், அதிக பவர்: புது அவதாரத்தில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 150 பைக்... அறிமுக விபரம்!
சுஸுகி நிறுவனம், அதன் ஜிக்ஸெர் 150 மாடலை அப்கிரேட் செய்து வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்கிரேடால், இந்த பைக் மிரட்டலான ஸ்டைலையும், அதிக பவரைக் கொண்டதாகவும் உருவாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், அதன் ஜிக்ஸெர் எஸ்எஃப் 150 மோட்டார்சைக்கிளை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 2019 சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்-இன் விலை ரூ. 1.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

இந்த புதிய அப்கிரேட் செய்யப்பட்ட ஜிக்ஸெர் எஸ்எஃப் 150, முந்தைய மாடலைக் காட்டிலும் பிரீமியம் ரகத்தில் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இந்த புதிய பைக்கின் ஸ்டைலை அந்த நிறுவனம் வெகுவாக மெருகேற்றியிருக்கின்றது. இதனால், இந்த பைக் மிரட்டலான ஸ்டைலில் காட்சியளிக்கின்றது. அவ்வாறு, தற்போது வெளிவந்திருக்கும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 150 பைக் ஸ்போர்ட் பைக்கைப் போன்று காட்சியளிக்கின்றது.

இந்த மோட்டார்சைக்கிளுடன் சுஸுகி நிருவனம், ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் 150 ஜிக்ஸெரைக் காட்டிலும் சக்தி வாய்ந்ததாகவும், மிடுக்கான லுக்கைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இது 150 ஜிக்ஸெரின் சகோதரனைப் போன்ற காட்சியைப் பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்பிலிருந்த இரு மோட்டார்சைக்கிள்களையும் சுஸுகி நிறுவனம், இன்று (மே 20) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இதில், முதலாவதாக ஜிக்ஸெர் 150 எஸ்எஃப் மாடல் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம். தற்போது களமிறக்கப்பட்டிருக்கும் ஜிக்ஸெர் 150 எஸ்எஃப் பைக்கின் ஸ்டைல், முந்தைய மாடலைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் மாற்றங்களைப் பெற்றுள்ளன. அதனடிப்படையில், கூர்மையான மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்தில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பைக்கில் ஸ்போர்ட் பைக்கில் வழங்கப்படுவதைப் போன்ற, ஸ்பிலிட் டைப் இருக்கைகள் மற்றும் கிளிப் ஹேண்டில் பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், சிறப்பு வசதிகளாக எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட், குரோம் கார்னிஷ் பினிஷ் கொண்ட டபுள் பேரல் எக்சாஸ்ட் மஃப்ளர் மற்றும் முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

சுஸுகியின் இந்த 2019 ஜிக்ஸெர் எஸ்எஃப் 150 பைக்கில் 154.9 சிசி திறனை வழங்கும் ஏர் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8,000 ஆர்பிஎம்மில் 14.1 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸின் உதவியில் இயங்குகின்றது.

இதைத்தொடர்ந்து, மேலும் சிறந்த மெக்கானிக்கல் மாற்றமாக மோட்டார்சைக்கிளின் சஸ்பென்ஷன்களிலும் புது மாற்றம் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், இந்த பைக்கின் முன் பக்கத்தில் 41எம்எம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோசாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், நடப்பாண்டில் அமலாக இருக்கும் பாதுகாப்பு விதிகளுக்கேற்ப சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பிரத்யேகமான புதுப்பித்தலை அந்த நிறுவனம் ஜிக்ஸெர் எஸ்எஃப் 150 மாடலில் மட்டுமின்றி, குவார்டர் லிட்டர் மாடலான எஸ்எஃப் 250 மாடல் பைக்கிலும் செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையால், இந்த பைக்குகள் அதிக பவர் கொண்டதாகவும், ஸ்டைலுடையதாகவும் உறுவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








