மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக் அறிமுகம்!
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

க்ரூஸர் பைக் மார்க்கெட்டில் விலை குறைவான தேர்வாக சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. பஜாஜ் அவென்ஜர் பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்ட இந்த பைக் பெரிய எதிர்பார்ப்புடன் வந்தது. சுஸுகி இன்ட்ரூடெர் 800 பைக்கின் டிசைன் தாத்பரியங்களும் இதனை பெரிதும் பேசப்பட வைத்தது. ஆனால், சுஸுகி நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு அதன் விற்பனை இல்லை.

ஸ்பெஷல் எடிசன்களையும் விட்டு பார்த்தும் பிரயோஜனம் இல்லை. கடந்த சில மாதங்களாகவே விற்பனை முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய இன்ட்ரூடெர் 150 பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய மாடலில் மெட்டாலிக் மேட் டைட்டானியம் சில்வர் என்ற புதிய வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், மேம்படுத்தப்பட்ட கியர் மாற்றும் முறை, பிரேக் பெடல் மற்றும் ஃபுட்பெக்குகள் ஆகியவை ஓட்டுபவருக்கும், அமர்ந்து செல்பவருக்கும் சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் இருக்கும் 155சிசி எஸ்இபி எஞ்சின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் என்று சுஸுகி தெரிவித்துள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக் ரூ.1,08,162 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பஜாஜ் அவென்ஜர் பைக்குகளுடன் புதிய மாடல் போட்டி போடும். மேம்படுத்தப்பட்ட இந்த மாடல் வாடிக்கையாளர்களை கவரும் என்று சுஸுகி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








