2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2,500 சிசி எஞ்சினுடன் வந்திருக்கும் இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

சில மாதங்களுக்கு முன் உலக அளவில் 2020 ஆண்டு மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் கோவாவில் நடந்து வரும் இந்திய பைக் வீக் திருவிழாவின் மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த பைக் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற டூரர் வகையை சேர்ந்தது. வெளிநாடுகளில் இந்த பைக் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜிடி என இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ராக்கெட் 3 ஆர் என்ற மாடலில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.

2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ராக்கெட் 3 ஆர் பைக்கில் 3 சிலிண்டர்கள் கொண்ட 2,500 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 167 எச்பி பவரையும், 221 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு ஹெலிகல் கட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரைடு பை த்ராட்டில் தொழில்நுட்பமும், ஹைட்ராலிக் க்ளட்ச் வசதியும் உள்ளன.

2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

எஞ்சினில் இலகு எடையுடன் கூடிய முக்கிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதன் மூலம், பழைய எஞ்சினைவிட இந்த எஞ்சின் 18 கிலோ எடை குறைவானது. முந்தைய மாடலைவிட பைக்கின் மொத்த எடை 40 கிலோ வரை குறைந்துள்ளது.

2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இலகு எடையும், அதிக உறுதித்தன்மையும் கொண்ட புதிய அலுமினிய அடிச்சட்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முன்புறத்தில் ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஷோவா பிக்கிபேக் ரிசர்வாயர் மற்றும் ரிமோட் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன.

2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

முன்புறத்தில் பிரெம்போ நிறுவனத்தின் ஸ்டைல்மா 4 பிஸ்டன் மோனோபிளாக் காலிபர்களுடன் கூடிய 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் பிரெம்போ எம்4.32 டைப் 4 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த பைக்கில் ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன. புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் கரோஸி ரெட் மற்றும் ஃபான்டம் பிளாக் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

மிக பிரம்மாண்டமான இந்த புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 பைக்கிற்கு ரூ.17.7 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லை. எனினும், இது டுகாட்டி டயாவெல் மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 7, 2019, 11:50 [IST]
English summary
British premium bike maker, Triumph Motorcycles has launched the 2020 Rocket 3 R in India for a starting price of Rs 18 lakh (ex-showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+