அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக்கின் ஸ்பை படங்கள்!

அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கின் ஸ்பை படங்கள் முதல்முறையாக இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களையும், இந்த பைக்கின் சிறப்பம்சங்களையும் காணலாம்.

அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக்கின் ஸ்பை படங்கள்!

பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவைலட் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராவைலட் நிறுவனத்தில் ரூ.6 கோடியை முதலீடு செய்தது. இதனையடுத்து, எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு பணிகளில் தீவிரப்படுத்தியது அல்ட்ராவைலட்.

அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக்கின் ஸ்பை படங்கள்!

மேலும், தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக் குறித்த தகவல்களையும் இணையதளத்தில் பதிவேற்றியது. எஃப்-77 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் பைக் பெட்ரோலில் இயங்கும் 250சிசி மாடல்களுக்கு இணையான திறன் மற்றும் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில், முதல்முறையாக அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக்கின் ஸ்பை படங்கள் ஆட்டோகார் இந்தியா தளம் மூலமாக வெளியாகி இருக்கிறது. பெங்களூரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக்கின் ஸ்பை படங்கள்!

இந்த படங்கள் மூலமாக இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் பல முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கீழ்புறத்தில் பகல்நேர விளக்குகள் உள்ளன. மேலும், ஹெட்லைட், வால்பகுதி உள்ளிட்டவை கேடிஎம் பைக்குகளை நினைவூட்டுவதாக இருக்கிறது.

அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக்கின் ஸ்பை படங்கள்!

பேட்டரி மற்றும் மின்மோட்டார்களை முழுமையாக மறைக்கும் விதத்தில் பெரிய அளவிலான ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. க்ளிப் ஆன் ஹேண்டில்பார் மற்றும் முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக பைக் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களை ஓட்டுனர் பெற முடியும்.

பின்புறத்தில் இரட்டை எல்இடி பிரேக் லைட்டுகள் உள்ளன. அதேபோன்று, முழுமையான எல்இடி இண்டிகேட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவும் கேடிஎம் பைக்குகளை நினைவூட்டுவதாக இருக்கிறது. இந்த பைக்கில் மெட்ஸீலரன் எம்5 டயர்கள் பொருத்தப்பட்டு இருப்பது தெரிகிறது.

அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக்கின் ஸ்பை படங்கள்!

இந்த பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இருக்கும் என்று தெரிகிறது. அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றிருக்கிறது.

அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக்கின் ஸ்பை படங்கள்!

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக்கில் இருக்கும் திறன் வாய்ந்த பேட்டரி மூலமாக மின் மோட்டார் 33.5 பிஎச்பி பவரையும், 90 என்எம் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 0 - 100 கிமீ வேகத்தை 8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 140 கிமீ வேகம் வரை செல்லும். ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

புதிய அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் களமிறக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. முதல்கட்டமாக பெங்களூரில் விற்பனைக்கு களமிறக்கப்படும்.

Source: Autocarindia

Article Published On: Thursday, April 4, 2019, 14:53 [IST]
English summary
First spy images from Autocarindia have revealed the prototype of the Ultraviolet F-77 electric sport bike in all its key things and design details.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+