புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்

சூப்பர் பைக் பிரியர்களின் மத்தியில் யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் மாடல்கள் வெகு பிரபலமானவை. சூப்பர் பைக்குகளின் பொறியியல் வல்லமையை பரைசாற்றும் மாடல்களாக வலம் வருகின்றன. மோட்டோஜீபி உயர்வகை பைக் பந்தயத்தில் பயன்படுத்தப்படும் யமஹா ரேஸ் பைக்குளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த மாடல்கள் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்!

இந்த நிலையில், கால ஓட்டத்திற்கு தக்கவாறு இந்த இரண்டு பைக் மாடல்களும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள லகுனா செக்கா ரேஸ் டிராக்கில் நேற்றுமுன்தினம் நடந்த சூப்பர் பைக் வேர்ல்டு சாம்பியன்ஷிப் பந்தய நிறைவின்போது இந்த இரண்டு மாடல்களையும் பொது பார்வைக்கு கொண்டு வந்தது யமஹா நிறுவனம்.

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்!

யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகளின் வடிவமைப்பிலும், வசதிகளிலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஆர்1 எம் மாடலானது அதிக ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பு தொழில்நுட்பங்களுடன் ரேஸ் டிராக்கில் இயக்குவதற்கான கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்!

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் சூப்பர் பைக்குகளின் ஏரோடைனமிக் தாத்பரியம் சிறப்பானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏரோடைனமிக் திறன் 5.3 சதவீதம் கூடுதலாக மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்!

அதிவேகத்தில் காற்று எளிதாக உட்புகுந்து வெளியேறும் விதத்தில் ஹெட்லைட் ஹவுசிங்கில் ஏர் சேனல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஃபேரிங் பேனல்கள் காற்றை லாவகமாக தவிர்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. யமஹாா ஆர்1எம் பைக்கில் முன்புற ஃபேரிங் மற்றும் ஃபென்டர்களுக்கு இணையாக வால்பகுதியில் கார்பன் ஃபைபர் கவுல் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இரண்டு பைக்குகளும் குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்களுடன் வசீகரிக்கிறது.

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்!

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் ஆகிய இரண்டு மாடல்களிலும் 998 சிசி 4 சிலிண்டர் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் குறித்த தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை. தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களின் எஞ்சின் அதிகபட்சமாக 197.2 பிஎச்பி பவரையும், 112. என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது.

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்!

அதேநேரத்தில், புதிய மாடலின் எஞ்சினில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய சிலிண்டர் ஹெட், ராக்கர் ஆர்ம் லிவர், புதிய ஃபிங்கர் ஃபாலோவர் உள்ளிட்ட பாகங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இலகு எடையிலான டைட்டானியம் எஞ்சின் பாகங்கள், மெக்னிசியம் எஞ்சின் கவர் மற்றும் அலுமினிய பாகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களிலுமே டைட்டானியம் கனெக்ட்டிங் ராடுகள் உள்ளன.

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்!

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக் மாடல்களில் பாஷ் ஃப்யூவல் இன்ஜெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்டேக் வால்வில் நேரடியாக பெட்ரோலை வழங்கும் இந்த ஃப்யூவல் இன்ஜெக்டர்கள் மூலமாக சிறப்பான பிக்கப்பை இந்த மாடல்கள் அளிக்கும். ரைடு பை வயர் தொழில்நுட்பமும் முக்கிய அம்சமாக கூறலாம். இந்த எஞ்சின் யூரோ-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்!

புதிய யமஹா ஆர்1 எம் பைக்கில் லீன் சென்சிடிவ் டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வீலி கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இதற்காக, விசேஷ 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெசர்மென்ட் கன்ட்ரோல் யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்!

யமஹா ஆர்1 பைக்கில் மேம்படுத்தப்பட்ட பின்புற சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங் டேம்பர் இடம்பெற்றுள்ளது. யமஹா ஆர்1 எம் பைக்கில் ஓலின்ஸ் எலெக்ட்ரானிக் ரேஸிங் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷனை ஸ்மார்ட்போனை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் இணைத்து அட்ஜெஸ்ட் செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. யமஹா ஆர்1 பைக் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்திய மதிப்பில் ரூ.11.85 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்!

யமஹா ஆர்1 எம் பைக் ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்து வாங்க முடியும். இந்த பைக் இந்திய மதிப்பில் ரூ.17.88 லட்சத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எப்போது வரும் என்ற உறுதியான தகவல் இல்லை.

Most Read Articles
மேலும்... #யமஹா
English summary
The 2020 Yamaha YZF-R1 and YZF-R1M have made their debut. The two variants of the superbike were revealed at the Laguna Seca raceway over the World Superbike Championship weekend.
Story first published: Monday, July 15, 2019, 14:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X