ரூ.1.15 லட்சத்தில் புதிய ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 160 கிமீ முதல் 180 கிமீ வரை செல்லும்.

ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் முக்கிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ரூ.1.15 லட்சத்தில் புதிய ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

கடந்த மாதம் ஒகினவா நிறுவனம் ஐ- பிரெய்ஸ் என்ற ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதாக தெரிவித்து, முன்பதிவை துவங்கியது. முதல் லாட்டில் 500 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ரூ.1.15 லட்சத்தில் புதிய ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த நிலையில், முன்பதிவு துவங்கிய 15 நாட்களில் 450 ஸ்கூட்டருக்கு முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ஒகினவா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு இந்திய கடற்படைதான் முதல் வாடிக்கையாளர் என்றும் கூறி இருக்கிறது.

ரூ.1.15 லட்சத்தில் புதிய ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இதன்மூலமாக, இந்த ஸ்கூட்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது புலனாகிறது. புதிய ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு நவீன யுக அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ரூ.1.15 லட்சத்தில் புதிய ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரில் கழற்றி மாற்றும் வசதி கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஆம்பியர் பவர் சாக்கெட் மூலமாக சார்ஜ் செய்ய முடியும்.

ரூ.1.15 லட்சத்தில் புதிய ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 160 கிமீ முதல் 180 கிமீ வரை செல்லும். அதேநேரத்தில், இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்படவில்லை.

ரூ.1.15 லட்சத்தில் புதிய ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

ஒகினவா ஐ - பிரெய்ஸ் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈக்கோ என்ற பிரத்யேக அப்ளிகேஷன் கொடுக்கப்படுகிறது. இந்த அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். இந்த ஆப் பல்வேறு வசதிகளை அளிக்கும்.

ரூ.1.15 லட்சத்தில் புதிய ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த ஆப் மூலமாக, ஜியோ ஃபென்சிங் என்ற முக்கிய வசதி பெறலாம். அதாவது, குறிப்பிட்ட ஏரியாவிற்குள் மட்டுமே இந்தத ஸ்கூட்டரை எடுத்து செல்ல முடியும். 5 மீட்டர் முதல் 10 கிமீ பரப்புக்குள் மட்டுமே பயன்படுத்தலாம். இதனால், திருட்டிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். அடுத்து, வேக வரம்பையும் நிர்ணயித்துக் கொள்ளலாம்.

ரூ.1.15 லட்சத்தில் புதிய ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

பேட்டரியின் திறன், வண்டி எங்கு இருக்கிறது என்பதை பார்த்துக் கொள்ளும் வசதி, டிரிப் மீட்டர்கள், திசை காட்டும் வசதி, பராமரிப்பு இடைவெளி குறித்த எச்சரிக்கை உள்ளிட்ட பல வசதிகளை பெற முடியும்.

ரூ.1.15 லட்சத்தில் புதிய ஒகினவா ஐ- பிரெய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

புதிய ஒகினவா ஐ- பிரெய்ஸ் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் ரகத்திலான ஸ்கூட்டர் மாடல்களில் இது குறைவான விலை கொண்ட மாடலாக தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 24, 2019, 16:49 [IST]
English summary
Okinawa i-Praise electric scooter launched in India.
மேலும்... #ஒகினவா #okinawa
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+