இந்தியாவில் ரூ. 200 கோடியை வாரி இறைக்கும் ஒகினவா... எதற்கு தெரியுமா...?
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினா, ரூ. 200 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒகினவா நிறுவனம், இந்தியாவில் சுமார் 200 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த தொழிற்சாலை மூலம் வருடம் ஒன்றிற்கு மில்லியன் ஒக்கினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரிக்க, அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்போது, கரோலி (பிவாடி) பகுதியில் செயல்பட்டு வரும் ஒகினவாவின் புதிய பிளாண்ட்மூலம், நடப்பாண்டின் நிதியாண்டில் மட்டும் 90 ஆயிரம் யூனிட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அதுவும் சிங்கிள் ஷிஃப்ட் பணியின் முறையில் மூலம் இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அதேசமயம், இந்த பிளாணட் மூலம் வருடம் ஒன்றிற்கு 5 லட்சம் யூனிட்கள் வரை உற்பத்தி செய்யப்படும். ஆகையால், சந்தையில் ஒகினாவா ஸ்கூட்டர் மீதான டிமாண்ட் அதிகரிக்கும்பட்சத்தில், தற்போது உற்பத்தி செய்யப்படும் இந்த இலக்காணது இருமடங்காக, அதாவது 1.80 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒகினவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஜிதேந்தர் ஷர்மா கூறியதாவது, "நாங்கள் தற்போது 90 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்யும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதேசமயம், சந்தையில் ஒகினாவா ஸ்கூட்டர்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால், அதனை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணியை சுழற்சி முறையில் மேற்கொள்ள இருக்கின்றோம். இத்துடன், அடுத்த நிதியாண்டிற்குள் புதிய உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை 200 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட இருக்கும் அந்த பிளாண்டில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் அளவிலான ஒகினவா ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த புதிய பிளாணட்டானது ராஜஸ்தான் மாநிலத்தில் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேம் 2 திட்டத்தின் கீழ் ஒகினாவின் ஸ்கூட்டரின் விலை கணிசமாக குறைக்கப்பட்டிருப்பதால், அதற்கான எதிர்பார்ப்பு முந்தைய நிலவரத்தைக் காட்டிலும் தற்போது சற்று உயர்ந்துள்ளது. இதன்காரணமாக, அந்த நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

அந்த வகையில், ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் மின்சார ஸ்கூட்டருக்கு ரூ.17,000 வரை மானியம் பெறவிருப்பது உறுதியாகியுள்ளது. இது தற்போது, ரூ.79 ஆயிரத்து 290 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது. அதேபோன்று, ஒகினவா ஐ-பிரெய்ஸ் ஸ்கூட்டருக்கு ரூ. 26 ஆயிரம் வரை மானியம் கிடைக்க இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் தற்போது, ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 920 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது.

ஒகினவா ஐ-பிரெய்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிஎல்டிசி வாட்டர்புரூஃப் வசதி கொண்ட 72V மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான சக்தியை, 2.9 kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி வழங்கும். இந்த பேட்டரியை தனியாக கழட்டி சார்ஜ் போடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த போட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ தூரம் வரை செல்லலாம். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்தது, 2 முதல் 3 மணிநேரம் தேவைப்படுகின்றது.

அதேபோன்று, ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் ஸ்கூட்டரில் 1,200 வாட் திறன் கொண்ட வாட்டர் ப்ரூஃப் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு சக்தியை வழங்கும் விதமாக, 1.75 kWh திறன்கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 2 முதல் 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். அதேசமயம், இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 55 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறனைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








