டூ வீலர்களுக்கான புதிய நிதியுதவி திட்டம்... எக்கசக்க சலுகைகளுடன் அறிமுகம்!

ஓடிஓ கேபிடல் நிறுவனம், இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக நிதியுதவி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டூ வீலர்களுக்கான புதிய நிதியுதவி திட்டம்... எக்கசக்க சலுகைகளுடன் அறிமுகம்!

ஓடிஓ கேபிடல் என்ற நிறுவனம், வாகனங்களை வாங்குபவர்களுக்கான கடனுதவி திட்டத்தை கடந்த திங்களன்று அறிமுகம் செய்தது. இத்திட்டத்திற்காக 'மை ஓஎம்ஐ' என்ற பெயரை அது வைத்துள்ளது. இதற்கு மாத தவணையில் உரிமையாளர் என அர்த்தம்.

இத்திட்டத்தின்மூலம் பிரத்யேகமாக இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்பட உள்ளது.

டூ வீலர்களுக்கான புதிய நிதியுதவி திட்டம்... எக்கசக்க சலுகைகளுடன் அறிமுகம்!

இந்த நிதியுதவியைப் பெற குறிப்பிட்ட டீலர்கள் ஷோரூமில்தான் வாகனங்களை வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆகையால், எந்த வாகன நிறுவனமாக இருப்பினும் ஓடிஓ கேபிடல் நிறுவனத்தின் இந்த நிதி திட்டத்தின்மூலம் பயனடைய முடியும்.

தற்போது, நலிந்து கிடக்கும் இந்திய வாகன சந்தையைக் கவனத்தில் கொண்டு இந்நிறுவனம், மற்ற நிதியுதவி நிறுவனங்களைக் காட்டிலும் மிக குறைந்த அளவில் வட்டி மற்றும் மிக குறைவான இஎம்ஐ தேர்வு என்ற சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது.

டூ வீலர்களுக்கான புதிய நிதியுதவி திட்டம்... எக்கசக்க சலுகைகளுடன் அறிமுகம்!

அதேசமயம், எனது ஓஎம்ஐ திட்டத்தின்மூலம் இருசக்கர வாகனத்தை வழங்குவதற்கு மிக சுலபமான வழிமுறைகளே கடைபிடிக்கப்பட உள்ளது. அந்தவகையில், நிதியுதவியை நாடும் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 30 நிமிடங்களில் லோன் அப்ரூவல் மற்றும் ஆவணங்களை சரிபார்த்தலுக்கான கட்டணமில்லா (0% processing fee) திட்டம் உள்ளிட்டவற்றை கையாளப்பட உள்ளது.

டூ வீலர்களுக்கான புதிய நிதியுதவி திட்டம்... எக்கசக்க சலுகைகளுடன் அறிமுகம்!

பொதுவாக, வாகனங்களுக்கு கடனுதவி வழங்கும் ஒரு சில நிறுவனங்கள், வாகனத்தின் விலையில் பாதிக்கு பாதியை முன்தொகையாக கேட்பார்கள். ஆனால், ஓடிஓ நிறுவனம் ரூ. 5 ஆயிரத்தை முன் பணமாக கோருகின்றது. இதனை திரும்பி தருவதற்கும் அது திட்டமிட்டுள்ளது. அதேபோன்று, மற்ற இஎம்ஐ திட்டத்தைக் காட்டிலும் 30 சதவீதம் குறைவான தொகையையே ஓஎம்ஐ வசூலிக்க உள்ளது.

டூ வீலர்களுக்கான புதிய நிதியுதவி திட்டம்... எக்கசக்க சலுகைகளுடன் அறிமுகம்!

இத்துடன், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இஎம்ஐ காலத்தை 1 முதல் 3 வருடங்கள் வரை நீட்டித்து செலுத்தும் விதமான் திட்டத்தை இது கொண்டுள்ளது. இது முழுமையாக பூர்த்தியடைந்த பின்னர் வாடிக்கையாளர்களுக்கு 'நோ ஆப்ளிகேஷன்' சான்று வழங்கப்படுகின்றது. அத்துடன், கூடுதலாக இரு சலுகையை வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது.

MOST READ: சட்டை பட்டன் போடாத கார் டிரைவருக்கு கடும் அபராதம்... எவ்வளவு என தெரிந்தால் இன்னும் ஷாக் ஆயிடுவீங்க

டூ வீலர்களுக்கான புதிய நிதியுதவி திட்டம்... எக்கசக்க சலுகைகளுடன் அறிமுகம்!

முழுமையாக இஎம்ஐ பணத்தைச் செலுத்தி முடித்த வாடிக்கையாளர்கள், தங்களின் பழைய வாகனத்தை திரும்பிக் கொடுத்துவிட்டு புதிய வாகனத்திற்கு மாறுவது அல்லது வாகனத்தை ஒப்படைத்துவிட்டு அதற்குண்டான பணத்தைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற இரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

ஆகையால், பழைய வாகனத்தை ஓட்டி அலுத்துபோனவர்கள் ஓடிஓ நிறுவனத்தின் இந்த திட்டத்தின்கீழ் புதிய வாகனத்தை மீண்டும் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம்.

MOST READ: பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்: ஷெல் பங்க் ஊழியர்களின் அடாவடியால் வாகன ஓட்டி அவதி!

டூ வீலர்களுக்கான புதிய நிதியுதவி திட்டம்... எக்கசக்க சலுகைகளுடன் அறிமுகம்!

இத்துடன், ஓஎம்ஐ திட்டத்தின் நிதியுதவி பெற்று வாங்கப்படும் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு மற்றும் பராமரிப்பு வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து, தங்களை நுகரும் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் வாகனங்களை வழங்குவதற்காக மாநிலத்தில் இயங்கி வரும் 100-க்கும் மேற்பட்ட டீலர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

MOST READ: விபத்தில் சிக்கிய பைக் ரைடரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

டூ வீலர்களுக்கான புதிய நிதியுதவி திட்டம்... எக்கசக்க சலுகைகளுடன் அறிமுகம்!

அந்தவகையில், ஆர்யன் சுஸுகி, சஃபையர் ஹோண்டா, டான்சி ஹோண்டா, அவனிஷ் சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும்.

இத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே 140க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு ஓடிஓ கேபிடல் நிறுவனம் சோதனையோட்டமாக நிதியுதவி வழங்கியிருந்து. மேலும், இத்திட்டம் தற்போது பெங்களூரு மற்றும் மும்பையில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்தியன் மற்ற முக்கிய நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
OTO Capital Launched My EMI Plan. Read In Tamil.
Story first published: Thursday, September 26, 2019, 10:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X