பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்குவதா? அல்லது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதா? என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக இந்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. காற்று மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் ஆகியவை இதில் முக்கியமான பிரச்னைகளாக உள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

இருந்தபோதும் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவதா? அல்லது மின்சார வாகனங்களை வாங்குவதா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவி கொண்டுதான் உள்ளது. குறிப்பாக தற்போது நமது நாட்டில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளன. சமீப காலத்திற்கு முன்பு வரை இங்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மட்டுமே கிடைத்து வந்தன.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

ஆனால் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் கிடைக்க தொடங்கியுள்ளன. எனவே பெட்ரோல் ஸ்கூட்டர் (அ) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது. ஆனால் இவை இரண்டில் எந்த வகையான ஸ்கூட்டர் பெஸ்ட்? என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

எனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர்களின் நிறை, குறைகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். எதை தேர்வு செய்யலாம்? என்ற உங்களது குழப்பத்திற்கு விடை காண இந்த பதிவு உதவும் என நம்புகிறோம்.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

விலை: வாடிக்கையாளர்களின் முடிவில் ஆதிக்கம் செலுத்தும் மிக முக்கியமான காரணி விலையாகதான் இருக்கும். ஃபேம் II மானியம், ஜிஎஸ்டி குறைப்பு ஆகியவற்றுக்கு பிறகும் பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை சற்று அதிகமாகதான் உள்ளது. விலை மலிவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் கிடைக்கவே செய்கின்றன.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

ஆனால் அவற்றின் ரேஞ்ச் (ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தூரம்), வேகம் ஆகியவை குறைவாக உள்ளன. மேலும் டீலர் நெட்வார்க்கும் சிறியதாக உள்ளது. குறைவான விலை கொண்ட மின்சார ஸ்கூட்டர்களில் இதுபோல் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. உயர்தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது மலிவானது கிடையாது என்பதே பிரச்னை.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

இயக்குவதற்கான செலவு: இந்த விஷயத்தில் நிச்சயமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் பெஸ்ட். அதாவது பெட்ரோல் ஸ்கூட்டர்களை இயக்குவதற்கு ஆகும் செலவை விட மின்சார ஸ்கூட்டர்களை இயக்குவதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. எனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளர்கள் இந்த விஷயத்தை வாடிக்கையாளர்களிடம் அதிகம் எடுத்துரைக்கின்றனர்.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

பராமரிப்பு செலவு: பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது மின்சார ஸ்கூட்டர்களை பராமரிக்க ஆகும் செலவு குறைவு என்ற கருத்து பொதுவாகவே நிலவி வருகிறது. இது கிட்டத்தட்ட உண்மைதான். பராமரிப்பு செலவு மற்றும் இயக்குவதற்கு ஆகும் செலவு ஆகியவை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் மத்தியில் முன்னிலைப்படுத்துகின்றன.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

ரேஞ்ச்: தற்போதைய நிலையில் ஒரு சில உயர்தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 80-100 கிலோ மீட்டர் ரேஞ்ஜை வழங்குகின்றன. தினசரி பயன்பாட்டிற்கு இது உண்மையில் போதுமானதுதான். ஆனால் ரேஞ்ச் குறித்த பதற்றம் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கதான் செய்கிறது. நடுவழியில் சார்ஜ் இல்லாமல் நின்று விட்டால், என்ன செய்வது? என வாடிக்கையாளர்கள் அச்சப்படுகின்றனர்.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

போதாக்குறைக்கு இந்தியாவில் இன்னும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பெரிய அளவில் இல்லை. எனவே நடுவழியில் சார்ஜ் தீர்ந்து விட்டால், மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அதே நேரத்தில் இங்கு பெட்ரோல் பங்க்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டாலும் கூட கொஞ்ச தூரம் தள்ளி கொண்டு சென்றால், பங்க்கை அடைந்து விடலாம்.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

சுற்றுச்சூழல் காரணிகள்: இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. பிஎஸ்-6 பெட்ரோல் இன்ஜின்கள் தூய்மையானவைதான். ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதை விட சிறப்பானவை. எனவே சுற்றுச்சூழல் தொடர்பாக நீங்கள் கவலைப்படுபவர் என்றால், உங்கள் தேர்வு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகதான் இருக்க வேண்டும்.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

சார்ஜிங்/பெட்ரோல் நிரப்புதல்: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்ய வேண்டும். அதே சமயம் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்வதை காட்டிலும், பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு எரிபொருள் நிரப்புவதுதான் எளிதான விஷயம். பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பங்க்கில் எரிபொருள் நிரப்பு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்ய ஒரு சில மணி நேரங்கள் ஆகும். மின்சார ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் இருக்கிறதுதான். ஆனால் அதற்கும் கூட நேரம் எடுத்து கொள்ளும். எப்படி பார்த்தாலும் இந்த விஷயத்தில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள்தான் பெஸ்ட்.

Most Read Articles
English summary
Petrol Scooter VS Electric Scooter - Pros And Cons. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X