வாக்களிப்பை அதிகரிக்க பியாஜியோ செய்த காரியம் - என்ன தெரியுமா?

பியாஜியோ இந்தியா நிறுவனம், மக்களிடம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாக்களிப்பை அதிகரிக்க பியாஜியோ செய்த காரியம் - என்ன தெரியுமா?

பியாஜியோ நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் வெஸ்பா மற்றும் அப்ரிலியா பிராண்டில் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றது.

வாக்களிப்பை அதிகரிக்க பியாஜியோ செய்த காரியம் - என்ன தெரியுமா?

இந்நிலையில், இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், வாக்களர்கள் முழுமையாக வாக்குப் பதிவைச் செலுத்தும் விதமாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

வாக்களிப்பை அதிகரிக்க பியாஜியோ செய்த காரியம் - என்ன தெரியுமா?

அந்தவகையில், வாக்களிக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க பியாஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு, இலவச வாட்டர் வாஷ் மற்றும் சலுகை விலையில் சர்வீஸ் உள்ளிட்டவையை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்துடன், ரூ. 200-ல் வாகனங்களுக்கான மெயின்டனஸ் கான்ட்ராக்ட் வழங்கப்படுகிறது.

வாக்களிப்பை அதிகரிக்க பியாஜியோ செய்த காரியம் - என்ன தெரியுமா?

பியாஜியோவின் இந்த சலுகையானது, வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட உள்ளது. மேலும், இதனைப்பெற அதன் வாடிக்கையாளர்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். பின்னர், அவர்கள் வாக்களிக்கும்போது, விரலில் வைக்கப்படும் மை-யினை ஆதாரமாக காண்பிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு பியாஜியோவின் சலுகைகள் வழங்கப்படும்.

வாக்களிப்பை அதிகரிக்க பியாஜியோ செய்த காரியம் - என்ன தெரியுமா?

பியாஜியோவின் இந்த முயற்சியானது, மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் முழுமையாக வாக்குப் பதிவை அளிக்க வேண்டும் என்பதே முதன்மை குறிக்கேளாகும். இந்த சலுகையை பியாஜியோ நிறுவனம் நாடு முழுவதும் வழங்க உள்ளது.

வாக்களிப்பை அதிகரிக்க பியாஜியோ செய்த காரியம் - என்ன தெரியுமா?

பியாஜியோ நிறுவனத்தைப் போன்றே பல்வேறு நிறுவனங்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை, அதன் வாடிக்கையாளர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு, ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ. 199-க்கு சர்வீஸ் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தது. அதில், பிரஸ்ஸர் வாஷ் மற்றும் ஜெனரல் சர்வீஸ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

வாக்களிப்பை அதிகரிக்க பியாஜியோ செய்த காரியம் - என்ன தெரியுமா?

இதேபோன்று, நாட்டில் இயங்கி வரும் பல்வேறு முக்கிய நிறுவனங்கள், தேர்தலின்போது வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமான முயற்சியில் ஈடுபடட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2019, 10:44 [IST]
English summary
Piaggio Encourages Its Customers To Vote By Attractive Offers. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+