போலரிட்டி நிறுவனத்தின் 6 புதிய எலெக்ட்ரிக் சைக்கிள்கள் அறிமுகம்!

போலரிட்டி ஸ்மார்ட் பைக்ஸ் நிறுவனம் 6 புதிய மின்சார சைக்கிள்களை சந்தையில் அதிரடியாக களமிறங்கி உள்ளது. இந்த புதிய வகை மின்சார சைக்கிள்களின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

போலரிட்டி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் சைக்கிள்கள் ஹைப்ரிட் வகையிலான இரு பயன்பாட்டு முறை மாடலாக வந்துள்ளது. சைக்கிள் போலவும், மின்சார பைக் போலவும் பயன்படுத்த முடியும். அதாவது, செயல்திறன் மற்றும் இதர அம்சங்களில் மின்சார பைக்குகளுக்குரிய அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளன.

6 புதிய மின்சார சைக்கிள்களை களமிறக்கியது போலரிட்டி!

போலரிட்டி எலெக்ட்ரிக் சைக்கிள்கள் ஸ்போர்ட் மற்றும் எக்ஸிகியூட்டிவ் என இரண்டு வரிசைகளில் வந்துள்ளன. ஸ்போர்ட் வரிசையில் S1K, S2K, S3K ஆகிய மூன்று எலெக்ட்ரிக் சைக்கிள் மாடல்களும், எக்ஸிகியூட்டிவ் வரிசையில் E1K, E2K, E3K என மூன்று எலெக்ட்ரிக் சைக்கிள் மாடல்களும் வந்துள்ளன.

புதிய போலரிட்டி எலெக்ட்ரிக் சைக்கிள்கள் ரூ.38,000 முதல் ரூ.1.10 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளன. இந்த ஆறு எலெக்ட்ரிக் சைக்கிள்களும் போலரிட்டி நிறுவனத்தின் இணையதளத்தின் மூலமாக ரூ.1,001 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், டெலிவிரி அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் துவங்கப்பட உள்ளதாம்.

போலரிட்டி எஸ்1கே மின்சார சைக்கிளில் 1kW பிஎல்டிசி ஹப் மோட்டார் உள்ளது. இந்த பைக் 45 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.40,000 விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. லித்தியம் அயான் பேட்டரியுடன் கிடைக்கிறது.

எஸ்2கே மின்சார சைக்கிளில் 2kW மின் மோட்டார் உள்ளது. மணிக்கு 70 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.70,000 விலையில் கிடைக்கும். எஸ்3கே எலெக்ட்ரிக் சைக்கிளில் 3kW மின் மோட்டார் உள்ளது. மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.1.10 லட்சம் விலையிலும் கிடைக்கும்.

6 புதிய மின்சார சைக்கிள்களை களமிறக்கியது போலரிட்டி!

இ1கே மின்சார சைக்கிளில் 1kW மின் மோட்டார் உள்ளது. மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்லும். ரூ.38,000 விலையில் கிடைக்கும். இ2கே பைக்கில் 1.5kW மின் மோட்டார் உள்ளது. இந்த மாடல் 60 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.65,000 விலையில் கிடைக்கும். இ3கே மின்சார சைக்கிளில் 2.5kW மின் மோட்டார் உள்ளது. மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.1.05 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த 6 மின்சார சைக்கிள்களிலும் உள்ள லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்கும். பேட்டரியை முழுமையாக சாதாரண வீட்டு சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்வதற்கு 4 மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 2 மணிநேரத்தில் பேட்டரியை சார்ஜ் ஏற்றிவிடலாம்.

இந்த மின்சார சைக்கிள்களில் எல்இடி விளக்குகள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. ஜிபிஎஸ் மற்றும் புளூடூத் வசதிகளை வழங்கும். ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் அப்ளிகேஷன்கள் மூலமாக பல்வேறு வசதிகளை பெற முடியும்.

முதல்கட்டமாக முதலாம் நிலை மெட்ரோ நகரங்களை குறிவைத்து வர்த்தகத்தை துவங்கி உள்ளது. சென்னை, பெங்களூர், ஆமதாபாத், டெல்லி, கோல்கத்தா, ஹைதராபாத், புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. எதிர்காலத்தில் வீட்டிலேயே டெலிவிரி கொடுக்கும் திட்டமும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2019, 15:08 [IST]
English summary
Polarity smart bikes company has launched 6 all new electric bicycles In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+