ரிவோல்ட் நிறுவனத்தின் அடுத்த புதிய எலெக்ட்ரிக் பைக் இதுதான்!

ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலாக ஆர்வி400 பைக் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அடுத்த எலெக்ட்ரிக் பைக்கின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரிவோல்ட் நிறுவனத்தின் அடுத்த புதிய எலெக்ட்ரிக் பைக் இதுதான்!

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட முதல் பைக் மாடலாக ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் பைக் மாடல்களும் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பைக்கின் விலை அறிவிக்கப்படாமல், புதுமையாக மாதத் தவணை முறையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ரிவோல்ட் நிறுவனத்தின் அடுத்த புதிய எலெக்ட்ரிக் பைக் இதுதான்!

இந்த நிலையில், ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக் மாடல்களின் அறிமுக விழா நிறைவுபெறும் தருவாயில், அரங்கத்தில் இருந்த பிரம்மாண்ட திரையில், அடுத்த எலெக்ட்ரிக் பைக்கின் டீசரை ரிவோல்ட் நிறுவனம் வெளியிட்டது.

ரிவோல்ட் நிறுவனத்தின் அடுத்த புதிய எலெக்ட்ரிக் பைக் இதுதான்!

அதன்படி, ரிவோல்ட் நிறுவனத்தின் அடுத்த எலெக்ட்ரிக் பைக் மாடல் கஃபே ரேஸர் ஸ்டைலில் வர இருப்பது தெரிய வந்துள்ளது. புதிய ரிவோல்ட் கஃபே ரேஸர் எலெக்ட்ரிக் பைக்கிலும் எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற இருக்கின்றன.

ரிவோல்ட் நிறுவனத்தின் அடுத்த புதிய எலெக்ட்ரிக் பைக் இதுதான்!

கஃபே ரேஸர் என்பதை வெளிக்காட்டும் அனைத்து டிசைன் அம்சங்களையும் டீசரிலேயே பார்க்க முடிகிறது. வட்ட வடிவிலான ஹெட்லைட், க்ளிப் ஆன் ஹேண்டில்பார், ஒற்றை இருக்கை, பின்புற கவுல் அமைப்பு ஆகியவை இதனை தனித்துவப்படுத்துகின்றன.

ரிவோல்ட் நிறுவனத்தின் அடுத்த புதிய எலெக்ட்ரிக் பைக் இதுதான்!

இந்த பைக்கின் தொழில்நுட்ப விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், நேற்று அறிமுகம் செய்யப்பட்ட ரிவோல்ட் ஆர்வி400 பைக்கின் பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வாய்ப்புள்ளது.

ரிவோல்ட் நிறுவனத்தின் அடுத்த புதிய எலெக்ட்ரிக் பைக் இதுதான்!

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கில் 3.24kW லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், 3kW மின் மோட்டாரும் உள்ளது. இந்த மின் மோட்டார் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 156 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று அராய் சான்றளித்துள்ளது.

ரிவோல்ட் நிறுவனத்தின் அடுத்த புதிய எலெக்ட்ரிக் பைக் இதுதான்!

நடைமுறையில் 80 முதல் 150 கிமீ தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என்று ரிவோல்ட் நிறுவனமே தெரிவித்துள்ளது. எனவே, நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற மாடலாக இருக்கும். ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளை போன்றே மாதத் தவணை திட்டத்தில் இந்த புதிய மாடலும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

ரிவோல்ட் நிறுவனத்தின் அடுத்த புதிய எலெக்ட்ரிக் பைக் இதுதான்!

ரிவோல்ட் நிறுவனத்தின் புதிய கஃபே ரேஸர் எலெக்ட்ரிக் பைக் மாடலின் விலை, ரிவோல்ட் ஆர்வி400 மாடலையொட்டியதாகவே இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மாடல் மிக விரைவாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 29, 2019, 10:35 [IST]
English summary
Revolt Cafe Racer electric motorcycle teased. Revolt Motors has confirmed its next product for the Indian market, which is expected to be a cafe-racer styled electric motorcycle for the Indian market.
மேலும்... #ரிவோல்ட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+