ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச் விபரம் வெளியானது!
ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச் குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நடிகை அசின் கணவரும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகுல் ஷர்மா எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். ரிவோல்ட் என்ற நிறுவனத்தை அண்மையில் துவங்கினார்.

இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த பைக்கிற்கு அராய் நிறுவனம் சோதனைகளை நடத்தி சான்று அளித்துள்ளது.

அதில், ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் 10.2 டிகிரி சரிவான பாதையில் திக்கி திணறாமல் ஏறி சென்றுள்ளது. மேலும், உதிரிபாகங்களின் தரம், தண்ணீர் புகாத அம்சங்கள் மற்றும் அனைத்து சீதோஷ்ண நிலைகளில் எவ்வாறு செயல்படுகிறது உள்ளிட்ட விபரங்கள் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று அராய் சான்றளித்தள்ளது. எனவே, தினசரி பயன்பாட்டிற்கு சிறந்த பைக் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்கிற்கான பேட்டரி மற்றும் மின்மோட்டார்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஹரியானாவில் உள்ள ரிவோல்ட் நிறுவனத்தின் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. இந்த திறன் வாய்ந்த பேட்டரி மற்றும் மின் மோட்டார் சிறந்த செயல்திறனை வழங்கும் விதத்தில் இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் கூடிய முதல் பைக் மாடலுக்கும் அராய் சான்றளித்திருப்பதுடன் மிக குறுகிய காலத்தில் இந்த சோதனைகளில் வெற்றி கண்டிருக்கிறது ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக். எனவே, இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








