Just In
- 10 hrs ago
புதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா?
- 13 hrs ago
எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!
- 14 hrs ago
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- 15 hrs ago
புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்
Don't Miss!
- Movies
ரஜினி பேசிய அந்த ஒரு டயலாக் போதும்…. பா. ரஞ்சித் உருக்கம்!
- News
கருத்துக்களம்: குடியுரிமை சட்ட மசோதா ஏன் தேவை..? - வானதி சீனிவாசன்
- Technology
செவ்வாய் கிரகத்தில் குடிநீர்! செவ்வாய் கிரகத்தின் புதையல் மேப்பை வெளியிட்ட நாசா!
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இனிதே துவங்கியது அசின் கணவரின் கனவு பயணம்... மின்சார பைக்கின் டெலிவரியால் புனே வாசிகள் மகிழ்ச்சி!
பிரபல திரைப்பட நடிகையான அசினின் கணவரால் தொடங்கப்பட்ட மின்வாகன உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது டெலிவரி செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், அதன் முதல் மின்சார இருசக்கர வாகனமான ஆர்வி400 மாடலின் டெலிவரியைத் தொடங்கியுள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனமாக களமிறங்கியுள்ள இந்நிறுவனம் முன்னதாக புனே மற்றும் தலைநகர் டெல்லியில் அதன் மின்சார பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

ரிவோல்ட் நிறுவனம், பிரபல திரைப்பட நடிகை அசின் கணவர் ராகுல் ஷர்மாவுடையது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் முன்னதாக மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த செல்போன்களுக்கு ஏற்பட்ட விற்பனை குறைவையடுத்து அவர் மின்வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களை தொடங்கி, நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், ராகுல் ஷர்மாவின் கனவு பயணாக தொடங்கப்பட்ட ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின் முதல் பேட்ச் தயாரிப்பு பைக்குகள் புனேவில் உள்ள கல்யாணி நகர், ஐசிசி டெக் பார்க், எஸ்பி சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஷோரூம்கள் வாயிலாக முதல்கட்டமாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்நிறுவனம் ரிவோல்ட் ஆர்வி 400 மற்றும் ஆர்வி 300 மாடல்களை மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதில் ஆர்வி 400 மாடலின் டெலிவரி மட்டுமே தொடங்கியுள்ளது.

மின்சார பைக்குகளின் உற்பத்தியை அதிகரிக்கும் பணியில் கவனம் செலுத்தி வரும் ரிவோல்ட், தற்போது நாடு முழுவதும் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றது.
மேலும், முன்னதாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு உரிய மின்சார பைக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்யவும் அது தீவிரம் காட்டி வருகின்றது. இதனை முடிந்தளவிற்கு முன்கூட்டியே செய்து முடிக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, ரிவோல்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் ஷர்மா கூறியதாவது, "புனேவில் மின் வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் ப்ரீ புக்கிங் மூலம் எங்களால் அறிந்துக் கொள்ள முடிகின்றது. ஆர்வி400 மாடல் அதன் பயனாளிக்கு அதீத அளவில் தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும், அவர்கள் இந்த பைக்கில் உல்லாசமான பயணத்தை அனுபவிப்பார்கள் என நம்புகின்றோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவில் எங்களுக்கு கிடைத்து வரும் இந்த அதீத வரவேற்பிற்கு காரணமான அனைவருக்கும் நாங்கள் இந்த தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். எங்களின் தயாரிப்புகளுக்காக புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றி கடன் பட்டுள்ளோம். அதிகரித்து வரும் புக்கிங் காரணமாக 2020 ஜனவரி-பிப்ரவரி மாதங்களுக்கான புக்கிங்கை விரைவில் முடக்க உள்ளோம்" என்றார்.

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், ஆர்வி 300 மாடலை ஒரு வேரியண்டிலும், ஆர்வி 400 மாடலை ஸ்டாண்டர்டு மற்றும் பிரிமியம் என இரு வேரியண்டுகளிலும் அறிமுகம் செய்தது.

மேலும், சிறப்பு வசதியாக இரு மாடல்களுக்கும் மாதத் தவனை முறையும் அது அறிமுகம் செய்தது. இதில், ஆர்வி 300 மாடலுக்கு ரூ. 2,999 என்ற தவனைத் திட்டத்தையும், ஆர்வி 400 மாடலின் ஸ்டாண்டர்டு வேரியண்டிற்கு ரூ. 3,499 என்ற தொகையும், ஆர்வி 400 பிரிமியம் வேரியண்டிற்கு ரூ. 3,999 என்ற தொகை திட்டங்களையும் அது அறிவித்திருந்து. இந்த தவனைத் திட்டமானது மொத்தம் 37 மாதங்கள் வரை செலுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், ஆர்வி 300 மாடலுக்கு ரூ. 1,15,963 என்ற விலையும், ஆர்வி 400 மாடலின் ஆரம்ப நிலை மாடலுக்கு 1,34,463 ரூபாயும், உயர்நிலை மாடலான பிரிமியம் வேண்டிற்கு ரூ. 1,47,963 என்ற விலையையும் நிர்ணயம் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ரிவோல்ட் நிறுவனத்தின் மாத தவனை திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு உடன்பாடில்லை என்றால், ஒரே தவனையில் பணத்தைச் செலுத்தி மின்சாரை பைக்கை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, ஆர்வி 300 மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த பைக் 85 ஆயிரம் ரூபாய் என்ற விலையிலும், ஆர்வி 400 மாடல்களுக்கு 99 ஆயிரமும் மற்றும் கூடுதல் விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.

மாத தவனை திட்டத்தில் ரிவோல்ட் பைக்கைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு அதன் பேட்டரி, டயர் மற்றும் பாகங்கள் உள்ளிட்டவற்றிற்கான பராமரிப்பு முழுவதையும் ரிவோல்ட் நிறுவனமே ஏற்கின்றது. ஆகையால், தவனை முறையில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் சார்ஜிங் போன்ற மற்ற விஷயங்கள்குறித்து கவலை கொள்ள தேவையில்லை என கூறப்படுகின்றது.

என்ட்ரீ லெவல் மாடலான ஆர்வி 300 மின்சார பைக்கில் 1.5 kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான திறன் 2.7 kW அயன் பேட்டரியில் இருந்து கிடைக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80-150 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 65 கிமீட்டர் ஆகும்.

இதேபோன்று, ஆர்வி400 பைக்கின் ஆரம்பநிலை வேரியண்டான ஸ்டாண்டர்டு மாடலில் 3 kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, 3.24 kW லித்தியன் அயன் பேட்டரியில் இருந்து திறனைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த பேட்டரியை ஒரு முழுயைாக சார்ஜ் செய்தால்180 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இது மணிக்கு அதிகபட்சமாக 85 வேகத்தில் செல்லக்கூடியது.

ஆர்வி 400 பைக்கின் உயர்நிலை மாடலாக இருக்கும் பிரிமியம் வேரியண்டில் 4ஜி அதிக திறன் கொண்ட பேட்டரி மற்றும் கூடுதல் ரேஞ்ச் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 4ஜி இன்டர்நெட் வசதி, இம்மொபிலிசர், ரிமோட் கீ, புஷ் ஸ்டார்ட் மற்றும் சவுண்ட் சிமுலேட்டர் சிஸ்டம், லொகேட்டர் மற்றும் ஆன்டி தெஃப்ட் வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் அதன் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்கை டெலிவரி செய்ய தொடங்கியிருக்கும் அதே வேலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலும், டெலிவரி சேவையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையிலும் ஓர் தரமான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் மற்றும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை தயாரித்து வருகின்றது. இதன்காரணமாகவே, இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் பல, மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கின்றது.

இந்நிலையில், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பைப் பெறும்விதமாக, ஹீரோ நிறுவனம், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தனது நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அந்த வாகனத்தை ஹோம் டெலிவரி செய்ய இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதற்காக கணிசமான அளவில் கட்டணத்தையும் அந்நிறுவனம் வசூலிக்க இருக்கின்றது.

ஆகையால், உங்களுக்கு பிடித்த ஸ்கூட்டரோ அல்லது பைக்கோ, ஸ்பிளெண்டர் முதல் எச்எஃப் டீலக்ஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் என எந்த வாகனத்தை வேண்டுமானாலும், அந்த ஹீரோ நிறுவனம் வீடு தேடி வந்து கொடுக்க உள்ளது.

இதற்காக, வாடிக்கையாளர்களாகிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இரண்டே விஷயம்தான். அதாவது, ஹீரோ நிறுவனம் இந்த பிரத்யேக வசதிக்காக தனி தளம் ஒன்றை தயாரித்திருக்கின்றது. https://www.hgpmart.com என்ற முகவரியில் உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்கு சென்று தங்களுடைய தகவல்கள் சிலவற்றை பதிவு செய்து, புக்கிங் செய்துகொள்ளலாம்.

ஹீரோ நிறுவனத்தின், இந்த துரிதமான நடவடிக்கையால், வாடிக்கையாளர்கள் ஷோரூமைத் தேடிச்சென்று பணத்தைச் செலுத்தி பைக்கைப் பெறும் தற்போதைய நடைமுறை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், வாடிக்கையாளர்கள் ஹீரோ நிறுவனத்தின் இருசக்கர வாகனத்தை தங்கள் வீடு தேடி வந்து ஒப்படைக்க, வெறும் மூன்று வழிகளை பின்பற்றினாலே போதுமானாதக இருக்கின்றது. அந்தவகையில், மேலே குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளத்தின் லிங்கை கிளிக் செய்து உல்ளே நுழைய வேண்டும்.

பின்னர், அதில் கேட்க்கும் தகவல்களை உள்ளீடு செய்துவிட்டு, தங்களுக் தேவையான பைக்கை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, நகரம் மற்றும் டீலரை தேர்வு செய்த பின்னர், இந்த வாகனத்திற்கான தொகையை செலுத்த வேண்டுன். இந்த வழிகளைப் பின்பற்றினாலே போதும், உங்கள் வீட்டைத் தேடி ஹீரோ நிறுவனத்தின் உங்கள் விருப்பமான இருசக்கர வாகனம் வந்துவிடும்.

ஆனால், ஹீரோ நிறுவனத்தின் இந்த சேவை இந்தியாவின் மூன்று நகரங்களில் மட்டுமே தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பாம்பே, பெங்களூரு மற்றும் நொய்டா உள்ளிட்ட நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டது.

தற்போது, முன்னோட்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை, இரண்டாம் கட்டமாக கூடுதலாக 25 நகரங்களில் விரைவில் தொடங்க இருப்பதாக ஹீரோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
சாதாரணமாகவே, ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்நிலையில், அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக சிறப்பான நடவடிக்கையில் ஹீரோ நிறுவனம் களமிறங்கியுள்ளது.

சமீபகாலமாக, ஆன்லைன் வர்த்தகம்தான் கொடிகட்டி பறக்க தொடங்கியுள்ளது. ஹீரோ நிறுவனத்தின் முன்மாதிரியான முயற்சி வரவேற்பளிக்கும் வகையில் இருக்கின்றது.
முன்னதாக, இதேபோன்று, ரிவோல்ட் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் அமேசானில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்ற, நடவடிக்கையால் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், வீண் அலைச்சலையும் தவிர்த்துக்கொள்ளலாம்.

ஹீரோ நிறுவனத்தின் இ-காமர்ஸ் பக்கத்தில் புக் செய்த பின்னர், வாகனத்தை அவரது பெயரில் புக் செய்வதற்கான ஆவணங்களை, மூன்றாம் நபரைக் கொண்டு ஹீரோ நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது. இதைத்தொடர்ந்து, வாகனத்தின் பதிவு முழுமையடைந்த பின்னர், அது உரியவரிடம் டெலிவரி செய்யப்படுகின்றது.

ஹீரோ நிறுவனம் இந்த சேவைக்காக 349 ரூபாய் வசூலிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், ஹீரோவின் இந்த சேவையைப் பெற விரும்புபவர்கள் இந்த கட்டணத்தைச் செலுத்தி, தங்களுக்கு பிடித்தமான பைக்கை பிடித்த இடத்தில் டோர் டெலிவரி பெற்றுக்கொள்ளலாம்.

முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டில்கூட இந்த நிறுவனம் இதேபோன்று ஓர் நடவடிக்கையை தொடங்கியிருந்தது. அந்தவகையில், பைக்குகளுக்கான ஸ்பேர் பார்ட்ஸ்களை அந்நிறுவனம் ஆன்லைனில் விற்பனைச் செய்ய தொடங்கியது.

இதைத்தொடர்ந்தே, தனது பைக்குகளையும் டோர் டெலிவரி செய்ய அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும், இந்த தளம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இதுவரை 400-க்கும் மேற்பட்ட பைக்குகளுக்கு புக்கிங் கிடைத்திருப்பதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.