மூன்று எலெக்ட்ரிக் பைக் மாடல்களை களமிறக்கும் ரிவோல்ட் நிறுவனம்!

ரிவோல்ட்

இந்தியாவில், மூன்று எலெக்ட்ரிக் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த அதிரடியாக திட்டமிட்டுள்ளது ரிவோல்ட் நிறுவனம்.

3 எலெக்ட்ரிக் பைக் மாடல்களை களமிறக்கும் ரிவோல்ட்!

நடிகை அசின் கணவரும், மைக்ரோமேக்ஸ் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகுல் ஷர்மா மின்சார பைக் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இருக்கிறார். ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த புதிய நிறுவனம் முதல் பைக் மாடலை ஜூன் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் மின்சார பைக்கிற்கான முன்பதிவு சமீபத்தில் துவங்கப்பட்டுவிட்டது. வரும் செப்டம்பர் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.

இந்த நிலையில், முதல்கட்டமாக மொத்தம் மூன்று மின்சார பைக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ரிவோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று மாடல்களுமே செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற மாடல்களாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பது வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களில் 4ஜி சிம் கார்டு பொருத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெற இருக்கிறது. இதன்மூலமாக வண்டியின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்

ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் பைக் மாடலானது 85 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கும். முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். தனது எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான பேட்டரி, மின் மோட்டார் உள்ளிட்டவற்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய இருக்கிறது ரிவோல்ட் நிறுவனம்.

இந்த பைக்குகளில் விசேஷ எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேட்டரி மேலாண்மை சாதனங்கள் இடம்பெற இருக்கின்றன. மேலும், பேட்டரியை கழற்றி மாட்டும் வசதியும் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள ரிவோல்ட் நிறுவனத்தின் ஆலையில் இந்த புதிய மின்சார பைக்குகள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த ஆலையில் ஆண்டுக்கு 1.20 லட்சம் மின்சார பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும்.

ரிவோல்ட் நிறுவனத்தின் மின்சார பைக்குகள் ஹீரோ எலெக்ட்ரிக், அல்ட்ராவைலட் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கடும் சந்தைப் போட்டியை தருவதாக அமையும்.

Source: Autocarpro

Most Read Articles
மேலும்... #ரிவோல்ட்
English summary
Electric vehicle manufacturers are on a roll in India thanks to FAME II scheme sanctioned by the government of India. Gurugram based Revolt Intellicorp has just revealed sketches of it's first electric motorcycle. The official sketches show a naked fighter styled motorcycle. However, there is no official statement about the motor.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X