நடிகை அசினின் கணவர் களமிறக்கும் அதிநவீன வாகனம்: இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கிறதா...?

நடிகை அசினின் கணவரும், மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் இணை இயக்குநருமான ராகுல் ஷர்மா இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் வாகனம் இதுதான். இதில் என்னவெல்லாம் சிறப்பம்சங்கள் இருக்கிறது என இந்த பதிவில் காணலாம்.

நடிகை அசினின் கணவர் களமிறக்கும் அதிநவீன வாகனம்: இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கிறதா...?

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய அரசு அண்மைக் காலங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்க எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.

நடிகை அசினின் கணவர் களமிறக்கும் அதிநவீன வாகனம்: இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கிறதா...?

இதைத்தொடர்ந்து, உள்நாடு மற்றும் வெளிநாட்டு மின் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களது எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் என்ற மின் வாகன தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை வருகின்ற ஜூன் மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை அசினின் கணவர் களமிறக்கும் அதிநவீன வாகனம்: இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கிறதா...?

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், நடிகை அசினின் கணவரும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகுல் ஷர்மா உடையது என தெரியவந்துள்ளது. இவர், மைக்ரோமேக்ஸ் செல்போன்கள் விற்பனை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, மின் வாகனங்களை விற்பனைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான பணிகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் தொடங்கிவிட்டார்.

நடிகை அசினின் கணவர் களமிறக்கும் அதிநவீன வாகனம்: இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கிறதா...?

இந்நிலையில், இந்த ரிவோல்ட் நிறுவனம் மூலம் அறிமுகமாக இருக்கும் முதல் மின்மோட்டார் சைக்கிளின் சோதனையோட்டத்தின் ஸ்பை படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த செய்தியை த்ரஷ்ட்ஜோன் இணையதளம் வெளியிட்டுள்ளது.

நடிகை அசினின் கணவர் களமிறக்கும் அதிநவீன வாகனம்: இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கிறதா...?

அவ்வாறு, கேமிராவின் கண்களில் சிக்கிய ரிவோல்ட் நிறுவனத்தின் இந்த முதல் மாடல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் புரோடோடைப்பில் வடிவம் பெற்றுள்ளது. மேலும், அது பார்ப்பதற்கு கேடிஎம்-இன் ட்யூக் குடும்பத்தில் இருந்து வெளிவந்த புதிய மாடல் போன்று காட்சியளிக்கிறது. அந்த வகையில், அதன் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது.

நடிகை அசினின் கணவர் களமிறக்கும் அதிநவீன வாகனம்: இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கிறதா...?

இந்த ரிவோல்ட் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் தோற்றமானது தனித்துவமான உருவத்தைப் பெற்றிருக்கிறது. ஆகையால், இந்த மின் மோட்டார்சைக்கிள் சாலையில் செல்லும்போது தனித்துவமான காட்சியை பெறும் என நம்பப்படுகிறது.

இதேபோன்று, ரிவோல்ட் மின் மோட்டார்சைக்கிளின் பேட்டரியானது, எஞ்ஜின் உள்ள அதே பகுதியில் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மின் மோட்டார் பின்பக்க வீலுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருப்பதைப் போல் காட்சியளிக்கிறது. மேலும், இந்த மின் மோட்டாருக்கு அதீத சக்தியை வழங்கும் வகையில் லித்தியம் அயன்-பேட்டரி ஸ்வேப் டைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

நடிகை அசினின் கணவர் களமிறக்கும் அதிநவீன வாகனம்: இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கிறதா...?

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக ரீசார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும், இந்த மின் மோட்டார்சைக்கிள் மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதன் முன்பக்கத்தில் இன்வெர்டட் டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்கத்தில் மோனோசாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.

நடிகை அசினின் கணவர் களமிறக்கும் அதிநவீன வாகனம்: இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கிறதா...?

இதைத்தொடர்ந்து, முன்பக்க சக்கரத்தில் ஏபிஎஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டியின் பாதுகாப்பான பயண அனுபவத்தை தரும். மேலும், இந்த மின் மோட்டார்சைக்கிள் ஆட்டோ இன்டலிஜென்ஸ் என்னும் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிக்கு பல்வேறு சிறப்பான சேவையை அளிக்கும். இதேபோன்று, 4ஜி எல்டிஇ இணையதள இணைப்பு வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை அசினின் கணவர் களமிறக்கும் அதிநவீன வாகனம்: இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கிறதா...?

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இந்த மின் மோட்டார்சைக்கிள் முதற்கட்டமாக தலைநகர் டில்லியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனைக்கு அறிமுகமாகும் கூறப்படுகிறது. மேலும், இந்த மின் மோட்டார்சைக்கிளின் விலை மற்றும் சில சிறப்பம்சங்களின் தகவல்கள் அறிமுகத்திற்கு பின்னரே வெளியிடப்படும் என்று ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 10, 2019, 17:48 [IST]
English summary
Revolt Motors First Electric Motorcycle Spied. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+