அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா..! அடுத்த புக்கிங் எப்போ...?

2019ம் ஆண்டிற்கான ரிவோல்ட் மின்சார பைக்குகளின் புக்கிங் தற்போது முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

மின்சார வாகனங்களை விரும்பும் யாரும், ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தைப் பற்றிய அறியாமல் இருக்க முடியாது என நாங்கள் நம்புகின்றோம்.

ஏனென்றால், இந்நிறுவனம் அண்மையில் ஆர்வி 300 மற்றும் ஆர்வி 400 ஆகிய இரு மாடல் எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

இவை மலிவான விலையில் பல்வேறு வசதிகளைக் கொண்டிருப்பதால், நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதேசமயம், இந்த எலெக்ட்ரிக் ஆரம்ப கட்டமாக டெல்லி மற்றும் புனே வாசிகளுக்கு மட்டும் தற்போது களமிறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தகுந்தது.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

இந்த நிறுவனம், பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், திரைப்பட நடிகை அசினின் கணவருமான ராகுல் ஷர்மா-வால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அண்மைக் காலங்களாக சந்தித்து வந்த மந்த நிலையைத் தொடர்ந்து, இந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளாக அறிமுகமாகியுள்ள ரிவோல்ட் ஆர்வி 300 மற்றும் ஆர்வி 400 ஆகிய எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு, மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்ததைப் போன்ற நல்ல வரவேற்பு தற்போது நிலவி வருகின்றது.

அந்தவகையில் நடப்பாண்டிற்கான அனைத்து எலெக்ட்ரிக் பைக்குகளிக்கான புக்கிங் இப்போதே முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

ஆகையால், அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான புக்கிங்கே இனி நடைபெறும் ரிவோல்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பைக்கிற்கு இத்தகைய வரவேற்பு கிடைக்க அதன் மலிவு விலை மட்டுமின்றி, மக்களைக் கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட சிறப்பு தவனை திட்டமும் ஓர் காரணமாக இருக்கின்றது.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

அந்தவகையில், ரிவோல்ட் நிறுவனம் மாதத் தவனை முறையில் பணத்தைச் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதனால், இந்த எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான புக்கிங் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் அமோகமாக நடைபெற்றது.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

இது, அந்த நிறுவனம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகளவில் புக்கிங்குகள் குவிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால், 2019ம் ஆண்டிற்கான அனைத்து யூனிட்டுகளுக்குமான புக்கிங் நிறைவடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எனவே நடப்பாண்டிற்கான அனைத்து ரிவோல்ட் எலெக்ட்ரிக் விற்று தீர்ந்திருப்பது உறுதியாகியுள்ளது.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

ரிவோல்ட் நிறுவனம், ஆர்வி 300 மாடலை ஒரே ஒரு வேரியண்டிலும், ஆர்வி 400 மாடலில் ஸ்டாண்டர்டு மற்றும் பிரிமியம் ஆகிய இரு வேரியண்டுகளிலும் அறிமுகம் செய்துள்ளது. இதில், ஆர்வி 300 மாடலுக்கு ரூ. 2,999 என்ற தொகையும், ஆர்வி 400 ஸ்டாண்டர்டு மாடலுக்கு ரூ. 3,499 என்ற தொகையும், ஆர்வி 400 பிரிமியம் மாடலுக்கு ரூ. 3,999 என்ற தொகையும் மாத தவனையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

இந்த தவனையானது மொத்தம் 37 மாதங்களுக்கு செலுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆர்வி 300 மாடலுக்கு ரூ. 1,15,963 என்ற விலையும், ஆர்வி 400 மாடலின் ஆரம்ப நிலை மாடலுக்கு ரூ. 1,34,463 என்ற விலையும், இதன் உயர்நிலை மாடலுக்கு ரூ. 1,47,963 என்ற விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

ஒரு வேலை உங்களுக்கு மேற்கூரிய மாத தவனை திட்டத்தில் உடன்பாடில்லை, ஒரே தவனையில் பணத்தைச் செலுத்த விரும்புகிறேன் என்றால் நீங்கள் ஆர்வி 300 மாடலுக்கு 85 ஆயிரம் ரூபாயும், ஆர்வி 400 மாடலுக்கு 99 ஆயிரமும் செலுத்த வேண்டும். இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

மாத தவனை திட்டத்தில், எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரி, டயர் மற்றும் பாகங்கள் உள்ளிட்டவற்றின் பராமரிப்பு ரிவோல்ட் நிறுவனத்தின் மூலமே ஏற்கப்படுகின்றது. ஆகையால், தவனை முறையில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் சார்ஜிங் விஷயத்தை மட்டுமே கவனத்தில் கொள்ளுகின்றனர். மற்ற அனைத்தையும் ரிவோல்ட் நிறுவனமே பார்த்துக் கொள்கின்றது.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

ரிவோல்டின் அனைத்து எலெக்ட்ரிக் பைக்குகளுக்கும் 5 வருடம் அல்லது 75 கிலோமீட்டர் என்ற வாரண்டி வழங்கப்படுகின்றது.

இதில், என்ட்ரீ லெவல் பைக்கான ஆர்வி 300 பைக்கில் 1.5 kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான திறனை 2.7 kW அயன் பேட்டரி வழங்குகின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80-150 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 65 கிமீட்டர் ஆகும்.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

இதேபோன்று, ஆர்வி400 பைக்கின் ஆரம்பநிலை மாடலில் 3 kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, 3.24 kW லித்தியன் அயன் பேட்டரியில் இருந்து திறனைப் பெறுகின்றது. இந்த பேட்டரியை ஒரு முழுயைாக சார்ஜ் செய்தால்180 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இது மணிக்கு அதிகபட்சமாக 85 வேகத்தில் செல்லக்கூடியது.

அடேங்கப்பா 2019க்கான புக்கிங் இப்போவே முடிஞ்சுடுச்சா!!! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரிவோல்ட்... அடுத்த புக்கிங் எப்போ...?

தொடர்ந்து, ஆர்வி 400 பைக்கின் உயர்நிலை மாடலாக காணப்படும் பிரிமியம் எலெக்ட்ரிக் பைக்கில் 4ஜி திறன் கொண்ட இன்டர்நெட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி ஆர்வி 300 இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், பைக் இம்மொபிலிசர், ரிமோட் கீ, புஷ் ஸ்டார்ட் மற்றும் சவுண்ட் சிமுலேட்டர் சிஸ்டம், பைக் லொகேட்டர் மற்றும் ஆன்டி தெஃப்ட் வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இதில் காணப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 24, 2019, 18:13 [IST]
English summary
Revolt RV300, RV400, & RV400 Premium Sold Out Till Years End: Bookings Open For January. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+