இந்தியர்களே இந்த நாளை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள்... ரிவோல்ட் அதிரடி அறிவிப்பு!

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், தனது ஆர்வி400 மாடல் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்வது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியர்களே இந்த நாளை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள்... ரிவோல்ட் அதிரடி அறிவிப்பு!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், தனது எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்நிறுவனம் இரண்டு முறை அறிமுக தேதியை அறிவித்துவிட்டு, அதனை தற்காலிகமாக வாபஸ் வாங்கியது. அவ்வாறு, கடந்த ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த அறிவிப்புகளை திரும்பப் பெற்றது.

இந்தியர்களே இந்த நாளை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள்... ரிவோல்ட் அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் ஓர் புதிய தேதியை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில், வருகின்ற 28ம் தேதி இந்த பைக் கட்டாயம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என அது தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியர்களே இந்த நாளை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள்... ரிவோல்ட் அதிரடி அறிவிப்பு!

இந்த பைக்கிற்கு ஏற்கனவே புக்கிங் தொடங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தகுந்தது. அண்மையில்கூட ஆன்லைன் வர்த்தகமான அமேசானில் ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு புக்கிங் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியர்களே இந்த நாளை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள்... ரிவோல்ட் அதிரடி அறிவிப்பு!

ரிவோல்ட் நிறுவனம், முதலில் ஆர்வி400 மாடலைதான் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பைக்கிற்கான புக்கிங்தான் அமேசானில் ரூ. 1,000 என்ற முன்தொகையில் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி தொடங்கியது.

இதுவரை ஒட்டுமொத்தமாக 2,500 புக்கிங்குகளை ஆர்வி400 பைக் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியர்களே இந்த நாளை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள்... ரிவோல்ட் அதிரடி அறிவிப்பு!

இந்த பைக்கிற்கு ஏற்கனவே ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்தநிலையில், மத்திய அரசு அண்மையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் ஜிஎஸ்டி வரியை 12-ல் இருந்து 5 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தது. இதனால், இந்தியாவில் உள்ள மின்வாகனங்களின் விலை கணிசமாக குறைய இருக்கின்றது.

இந்தியர்களே இந்த நாளை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள்... ரிவோல்ட் அதிரடி அறிவிப்பு!

அதேசமயம், ரிவோல்ட் நிறுவனத்தின் இந்த ஆர்வி 400 எலெக்ட்ரிக் பைக் மலிவான விலையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ரூ. 1 லட்சம் அல்லது அதற்கும் மலிவான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் வாகனத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியர்களே இந்த நாளை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள்... ரிவோல்ட் அதிரடி அறிவிப்பு!

மேலும், இந்த பைக்கில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்தவகையில், கனெக்டிவிட்டி அம்சம், ஸ்வாப்பபிள் (கழட்டி மாட்டிக் கொள்ளும்) ரகத்திலான பேட்டரி மற்றும் பன் தன்மைக் கொண்ட சார்ஜிங் முறை உள்ளிட்டவை இந்த எலெக்ட்ரிக் பைக்கில் இடம்பெற இருக்கின்றது.

இந்தியர்களே இந்த நாளை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள்... ரிவோல்ட் அதிரடி அறிவிப்பு!

அதிலும், மிக முக்கிய அம்சமாக 4ஜி சிம் கார்டு பொருத்தக்கூடிய இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் இடம்பெற உள்ளது. இது, எலெக்ட்ரிக் பைக்குடன் எப்போதும் நம்மை கனெக்ட்டிலேயே வைத்துக்கொள்ள உதவும்.

இந்தியர்களே இந்த நாளை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள்... ரிவோல்ட் அதிரடி அறிவிப்பு!

இத்துடன், பைக்கிற்காக பிரத்யேக செல்ஃபோன் ஆப் வழங்கப்பட உள்ளது. இதை வைத்து, ஆர்வி400 பைக்குறித்த பல்வேறு தகவல்களை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அத்துடன், இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் செயற்கை எக்சாஸ்ட் சிஸ்டத்தின் ஒலியையும்கூட இதன் மூலம் நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியும்.

இந்தியர்களே இந்த நாளை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள்... ரிவோல்ட் அதிரடி அறிவிப்பு!

அதேசமயம், இந்த ஆப் மூலம் பல்வேறு விதமான சவுண்டுகளை மாற்றியமைத்து கொள்ளவும் முடியும். இதுகுறித்த வீடியோவை ரிவோல்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இதனை நீங்கள் கீழே காணலாம்...

https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Frevoltmotorsin%2Fvideos%2F191206815166417%2F

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்காக களமிறங்கும் இந்த ஆர்வி400 மாடலில் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக, அதன் முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோசாக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், பாதுகாப்பு அம்சமாக இரு வீலிற்கும் டிஸ்க் பிரேக்குடன் கூடிய சிபிஎஸ் பிரேக்கிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களே இந்த நாளை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள்... ரிவோல்ட் அதிரடி அறிவிப்பு!

இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 156 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு 85 கிமீ வேகம் செல்லக்கூடிய திறனைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த பைக்குறித்த முழுமையான தகவலை அந்நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அவை, வருகின்ற 28ம் தேதியே வெளியாக உள்ளது.

இதை அறிந்து கொள்ள நம்முடைய டிரைவ்ஸ்பார்க் தமிழ்குழுவுடன் இணைந்திருங்கள்...

Most Read Articles
English summary
Revolt RV 400 Launch On 28 August. Read In Tamil.
Story first published: Wednesday, August 7, 2019, 20:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X