புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி விபரம் உறுதியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் பைக் மாடலை ரிவோல்ட் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது. ரிவோல்ட் ஆர்வி400 என்ற பெயரில் வர இருக்கும் எலெக்ட்ரிக் பைக்கிற்கு கடந்த மாதம் 25ந் தேதி முதல் அந்நிறுவனத்தின் இணையதளத்திலும், அமேஸான் தளத்திலும் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த பைக்கின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!

அடுத்த மாதம் 7ந் தேதி புதிய ரிவோல்ட் ஆர்வி400 பைக் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடன் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்படும்.

புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!

முதல்கட்டமாக டெல்லி மற்றும் புனே ஆகிய நகரங்களில் ரிவோல்ட் ஆர்வி400 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் அடுத்தடுத்த மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!

புதிய ரிவோல்ட் ஆர்வி400 பைக்கில் ஏராளமான சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. ரிவோல்ட் நிறுவனத்தின் மொபைல்போன் செயலி மூலமாக இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை இணைத்துக் கொண்டு பல்வேறு தகவல்களை பெற முடியும்.

புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

வண்டி எங்கு இருப்பதை அறிந்து கொள்வதற்கான வசதி, குறிப்பிட்ட பகுதியைவிட்டு வண்டி செல்லாதவாறு கட்டுப்படுத்தும் ஜியோ ஃபென்சிங் வசதி, வண்டியில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக தெரிந்து கொள்வதற்கான வசதி, ரிமோட் முறையில் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் 4 விதமான சைலென்சர் சப்தங்களை மாற்றிக் கொள்ளும் வசதிகள் உள்ளன.

புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கின் பேட்டரி, எஞ்சின் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப விபரங்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை. ஆனால், இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிமீ தூரம் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 85 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!

பல்வேறு முறைகளில் சார்ஜ் ஏற்றும் வசதியும் இந்த பைக்கிற்கு வழங்கப்பட இருக்கிறது. இதன் பேட்டரியை பிளக் மூலமாக இணைத்துக் கொண்டு சார்ஜ் ஏற்ற இயலும். பேட்டரியை தனியாக கழற்றி வேறு பேட்டரியை பொருத்திக் கொண்டு பயணிப்பதற்கான வசதியும் உண்டு. ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலமாக சார்ஜ் ஏற்றிய பேட்டரியை ஆர்டர் செய்து வீட்டிலேயே டெலிவிரி பெறும் வசதியும் வழங்கப்பட உள்ளது.

புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!

புதிய ரிவோல்ட் ஆர்வி400 பைக் டிசைன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கிறது. மேலும், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட்
English summary
Revolt Motors, an electric motorcycle start-up is all set to introduce its first product in the Indian market, the RV 400. The electric motorcycle was unveiled last month, with pre-bookings having already begun, both on the company website and Amazon.in.
Story first published: Saturday, July 20, 2019, 10:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X