ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்... ஒவ்வொன்றும் தனி ரகம்..!

வெவ்வேறு திறன் மற்றும் தோற்றம் கொண்ட மின்சார இருசக்கர வாகனங்களை ரோவெட் என்னும் ஆரம்பநிலை மின்வாகன உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

மஹராஷ்டிரா மாநிலம், புனே நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ரோவெட் நிறுவனம், மின்சார வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. ஆரம்பநிலை வாகன உற்பத்தி நிறுவனமாக கருதப்படும் இந்நிறுவனம், அதன் ஐந்து புத்தம் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

அவை ஒவ்வொன்றும் தனி சிறப்பு மிக்க வாகனங்களாக காட்சியளிக்கின்றன. இதில், 4 மின்சார ஸ்கூட்டர்கள், ஒரு மின்சார பைக் அடங்கும். இந்த அனைத்து வாகனங்களும் சிறப்பு நிகழ்ச்சி மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரோவெட் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒவ்வொரு மாடலும் அதற்கான தனித்துவமான திறனைப் பெற்றிருக்கின்றன. அதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

செபோப்

ரோவெட் நிறுவனத்தின் ஆரம்பநிலை மின்சார ஸ்கூட்டராக செபோப் காட்சியளிக்கின்றது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ஸ்கூட்டரில் 48V, 24Ah லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், சிறப்பான திறனை வெளிப்படுத்தும் வகையில் 250W மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

இத்துடன், மூன்று விதமான பேட்டரி தேர்வுகள் இந்த மாடலில் கிடைக்கின்றது. இத்தேர்வு, இந்த மாடலுக்கு மட்டுமின்றி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்து மாடல்களிலும் கிடைக்கின்றது. அந்தவகையில், லித்தியம், லீட் மற்றும் கிளிக் ஆகிய தேர்வில் கிடைக்கின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

ரோவெட் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு முழுமையான சார்ஜில் 90 கிமீ தூரம் வரை செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. இது பேட்டரி தேர்வை மாறுபடும். இதில், சிறப்பு வசதிகளாக ட்யூவல் சஸ்பென்ஷன், பெரிய அளவிலான பூட் ஸ்பேஸ், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் செல்போன் ஹோல்டர் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கிடைக்கின்றன.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

ரேம்

செபோப் மாடலை அடுத்து ரேம் என்ற மாடல் இருக்கின்றது. இந்த மின்சார ஸ்கூட்டரில் 60V, 30Ah திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், சிறப்பான திறனை வழங்கும் விதமாக 2,000 வாட் திறன் கொண்ட மின்மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக மணிக்கு 55 கிமீ என்ற வேகத்தில் செல்லும்.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

அதேசமயம், 45 கிமீ முதல் 120 கிமீ என்ற ரேஞ்சை வழங்கும் விதமான தேர்வுகளில் கிடைக்கின்றது. ரெட்ரோ ஸ்டைலில் காட்சியளிக்கும் இந்த ஸ்கூட்டர் அதற்கேற்ப வகையிலான மின் விளக்கு மற்றும் அம்சங்கள் உள்ளிட்டவற்றைப் பெற்றிருக்கின்றது.

இத்துடன், கூடுதல் பூட் ஸ்பேஸ், செல்போன் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

எலெக்

எலெக் மின்சார ஸ்கூட்டரில் 72 வோல்ட், 30Ah திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் லீட் ஆசிட் மற்றும் கிளிக் என்ற பேட்டரி பேக்குகள் தேர்வாக வழங்கப்படுகின்றது.

இதில், லித்தியம் பேட்டரி கொண்ட எலெக் 145 கிமீ ரேஞ்சையும், லீட் ஆசிட் மாடல் 120 கிமீ மற்றும் கிளிக் 90 கிமீ ரேஞ்சையும் வழங்குகின்றது. இந்த ஸ்கூட்டரும் சற்று பாரம்பரியம் தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

வெகட்ரான்

வெகட்ரான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டரைப் போன்று காட்சியளிக்கின்றது. இந்த லுக்கிற்கு ஏற்ப மற்ற ரோவெட் மின்சார ஸ்கூட்டர்களைக்காட்டிலும் சற்று அதிவேகத்தில் செல்லும் தயாரிப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப வெகட்ரான், அதிகபட்சமாக 65 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பம்சங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

இந்த அனைத்து மின்சார ஸ்கூட்டர்களையும் சார்ஜ் செய்ய குறைந்தது 3 மணி நேரம் முதல் 7 மணி நேரங்கள் வரை தேவைப்படுகின்றது. இது ஒவ்வொரு மாடலையும், அதன் பேட்டரி பேக்கையும் பொருத்து மாற்றமடைகின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

ட்ரோனோ மின்சார பைக்

ரோவெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ட்ரோனோ, சூப்பர் பைக்குகளைப் போன்று காட்சியளிக்கின்றது. இந்த மின்சார பைக்கில் 72வோல்ட், 40Ah திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அதீத திறனை வெளிப்படுத்துகின்ற வகையில் 3 ஆயிரம் வாட் திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

இந்த பைக்கில் சிறப்பு வசதிகளாக, டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், புரஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல் மின்விளக்குகள், ஸ்டைலிஸான அலாய் வீல்கள், ட்யூவல் டிஸ்க் பிரேக் மற்றும் சிறப்பான இருக்கை வசதி உள்ளிட்ட அம்சங்கள் காணப்படுகின்றன.

ரோவெட் நிறுவனம், அதன் தயாரிப்புகளை தற்போது மஹாராஷ்டிராவில் அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து, நாடு முழுவதும் அறிமுகம் செய்யும் பணியையும் அது மேற்கொண்டு வருகின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 மின் வாகனங்களை அறிமுகம் செய்த ரோவெட்...

மேலும், வருடம் ஒன்றிற்கு 10 ஆயிரம் யூனிட்டுகளை விற்பனைச் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேசமயம், அந்நிறுவனத்தின் உற்பத்தி மாதம் ஒன்றிற்கு ஆயிரமாக உள்ளது. இதனை விரைவில் அதிகரிக்கச் செய்ய இருப்பதாக அது அறிவித்துள்ளது.

அந்தவகையில், ஒவ்வொரு மாதமும் 10 யூனிட்டுகளை உற்பத்தி செய்ய அது இலக்கு நிர்ணயித்துள்ளது.

Most Read Articles
English summary
Rowwet Launched 1 Electric Bike & 4 Electric Scooters In India. Read In Tamil.
Story first published: Thursday, November 7, 2019, 14:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X