ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்களின் விலை அதிகரிப்பு!
ராயல் என்ஃபீல்டு 650 சிசி மோட்டார்சைக்கிள்களின் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்ட கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. குறிப்பாக, இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

இந்த இரு மோட்டார்சைக்கிள்களும் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்வதற்கு, மிக சவாலான விலையில் நிலைநிறுத்தப்பட்டதுதான் காரணம். இந்த நிலையில், இரு மாடல்களின் விலையையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உயர்த்தி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் விலை ரூ.6,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மார்க் த்ரீ, ஆரஞ்ச் க்ரஷ், சில்வர் ஸ்பெக்டர் ஆகிய வண்ணத் தேர்வுகளின் விலைரூ.2.56 லட்சமாகவும், ரேவிஷிங் ரெட், பேக்கர் எக்ஸ்பிரஸ் வண்ணத் தேர்வுகளின் விலை ரூ.2.64 லட்சமாகவும், கிளிட்டர் அண்ட் டஸ்ட் வண்ணத் தேர்வின் விலை ரூ.2.76 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி650 மோட்டார்சைக்கிளின் விலை ரூ.6,000 முதல் ரூ.6,400 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. கான்டினென்டல் ஜிடி650 மோட்டார்சைக்கிளின் வென்ச்சுரா புளூ, பிளாக் மேஜிக் ஆகிய வண்ணத் தேர்வுகளின் விலை ரூ.6,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த இரண்டு வண்ணத் தேர்வுகளின் விலையும் ரூ.2.71 லட்சமாக உயர்ந்துள்ளது.

அடுத்து, டாக்டர் மாஹேம் மற்றும் ஐஸ் குயின் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளின் விலையும் ரூ.6,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த இரண்டு வண்ணத் தேர்வுகளின் விலை ரூ.2.79 லட்சமாக அதிகரித்துள்ளது.

கான்டினென்டல் ஜிடி650 மோட்டார்சைக்கிளின் விலை உயர்ந்த மிஸ்டர் க்ளீன் வேரியண்ட்டின் விலை மட்டும் அதிகபட்சமாக ரூ.6,400 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வேரியண்ட்டின் விலை ரூ.2.92 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்த இரண்டு மாடல்களிலுமே 649 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டமும் உள்ளது.

இந்த மோட்டார்சைக்கிள்களுக்கு அதிக முன்பதிவுகள் கைவசம் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த விலை உயர்வால் இரண்டு மாடல்களின் விற்பனையில் எந்த பாதிப்பும் இருக்காது என்ற நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டு பிஎஸ்-6 எஞ்சின் கொண்ட மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








