ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் பைக்கை இளைஞர் ஒருவர், ஹார்லி டேவிட்சனின் ஃபேட் பாய் ரகத்தில் மாடிஃபை செய்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

ஹார்லி டேவிட்சன் மற்றும் ராயல் என்ஃபீல்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இந்தியாவில் மிகவும் பிரபலமான பைக் தயாரிப்பு நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன.

இந்த இரு நிறுவனங்களும் வெவ்வேறு யுக்தியைக் கையாண்டாலும், ஒரு விசயத்தில் மட்டும் ஒத்துபோகும் வகையில் அமைந்துள்ளன. அந்தவகையில், இவர்கள் இருவரும் உலகின் மிகப் பழமையான மற்றும் மிகச் சிறந்த பைக் தயாரிப்பாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

அதேசமயம், இந்த நிறுவனங்கள் ரெட்ரோ ஸ்டைலிலான பைக்குகளைத் தயாரித்தாலும், அவற்றிற்கிடையேயான விலை வித்தியாசம் மலையளவில் காட்சியளிக்கின்றது. அதில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள், ஹார்லி நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், மிக குறைவானதாக இருக்கும்.

ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

இருப்பினும், இந்த இரு நிறுவனங்களும் வேறொரு விஷயத்திலும் இணைந்திருப்பதை நம்மால் உணர முடிகின்றது. அது என்னவென்றால், அதிகபட்சமான ராயல் என்ஃபீல்ட் பைக்குகள், நமது நாட்டில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்படுகின்றன. இதையே நாங்கள் மற்றொரு இணைப்பாக கருதுகின்றோம்.

ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

இந்த மாடிஃபிகேஷன் இணைப்பிற்கு, ஹார்லி டேவிட்சனின் அதிக விலையேக் காரணமாக இருக்கின்றது. ஆகையால், பலர் தங்களின் ஹார்லி டேவிட்சன் பைக் வாங்கும் கனவினை, இந்த மாடிஃபிகேஷன்மூலம் நிவர்த்தி செய்துகொள்கின்றனர். அதேசமயம், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள் ஹார்லி நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் கணிசமாக ஒத்துப்போவதாலும், இந்த நடவடிக்கையை சிலர் மேற்கொள்கின்றனர்.

ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

அந்தவகையில், தற்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஃபேட் பாயாக ராயல் என்பீல்டின் புல்லட் பைக் உரு மாறியுள்ளது. இதுகுறித்த வீடியோவை பிஎல்சி பைக்கர் என்ற தளம் வெளியிட்டுள்ளது.

பிரத்யேக உரு மாற்றத்தைப் பெற்றிருக்கும் இந்த பைக், 2013 ராயல் என்பீல்டு புல்லட் ஸ்டாண்டர்டு மாடல் என கூறப்படுகின்றது. இதன் மதிப்பு தற்போது ரூ. 2.5 லட்சமாக உள்ளது. இந்த பைக் தற்போது விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

வீடியோவில் காட்சியளிக்கும் இந்த உருமாற்றம் பெற்ற ராயல் என்பீல்டு புல்லட் பைக், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞருடையதாகும். இவர், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பைக்மீது வைத்திருந்த ஆவலின் காரணமாக, இவ்வாறு மாடிஃபை செய்துள்ளார்.

அந்தவகையில், புல்லட்டின் ஒரிஜினல் பாகங்கள் பல நீக்கப்பட்டு ஆஃப்டர் மார்க்கெட் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், பெரும்பாலும் ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் பைக்குடைய பாகங்களாக காட்சியளிக்கின்றன.

ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பைக்கின் முன்பகுதி முழுக்க முழுக்க குரோம் பூச்சால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எக்சாஸ்ட் சிஸ்டம், பின்பக்க ஃபெண்டர், ஃபுட் ரெஸ்ட், இண்டிகேட்டர் உள்ளிட்டவை குரோம் பூச்சிலேயே காணப்படுகின்றது.

ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

மேலும், புல்லட்டிற்கு குண்டு பையனைப் போல காட்சியளிக்கும் விதமாக, க்ரூஸர் தோற்றத்திலான ஹெட்லேம்ப், இருக்கை அமைப்பு, ப்யூவல் டேங்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், இரு துளைக்களுடன் பொருத்தப்பட்டுள்ள எக்சாஸ்ட் சிஸ்டம் க்ரூஸர் லுக்கை கூடதல் தூக்கலாக காண்பிக்கும் வகையில் காட்சியளிக்கின்றது.

ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

அதேபோன்று, 19 இன்சிலான ரிம்மில் பரந்த அளவிலான 110 பிரிவு டயர் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், பைக்கின் அலங்காரத்திற்காக பொருத்தப்பட்டிருக்கும் பேனல்கள் அனைத்தும் கஸ்டமைஸ் செய்யப்பட்டதாக இருக்கின்றது. அந்தவகையில், எஞ்ஜின் குவார்ட், எஞ்ஜின் டர்ட் குவார்ட் மற்றும் ஏர் ஃபில்டர் உள்ளிட்டவை மாற்றத்தைக் கண்டுள்ளன.

ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

இந்த பைக்கின் ஹேண்டில்பாரை பார்த்தோமேயானால், மிகவும் ரம்மியமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இத்துடன், இதில் ஹேண்டில்பார் ரைசர்களும் இணைக்கப்பட்டுள்ளது.

சிறப்பான தோற்றம் மட்டுமின்றி, சொகுசான பயண அனுபவத்திற்காக பைக்கின் முன்பக்கத்தில் அப்சைட் - டவுண் ஃபோர்க் இணைக்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

அந்த ஃபோர்க்கில்தான் இன்டிகேட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன், கஸ்டமைஸ் செய்யப்பட்ட சேட்டில் பரந்த தோற்றத்தில் ப்யூவல் டேங்கிற்கு கீழாக ஃபோர்க்கில் நிறுவப்பட்டுள்ளது. இது ஃபைக்கிற்கு மிகச்சிறந்த அணிகலனைப் போல் காட்சியளிக்கின்றது.

ஹார்லி டேவிட்சனின் குண்டு பையனாக மாறிய ராயல் என்பீல்டு பைக்: வீடியோ!

அதேசமயம், பைக்கின் பின் பக்கத்தைப் பார்த்தோமேயானால், 190 பிரிவினாலான டயர் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வருகின்றது. மேலும், பைக்கின் பின் பக்க ஃபெண்டரிலேயே சிவப்பு நிற ஸ்டாப் லைட், இன்டிகேட்டர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய, சிறப்பு நடவடிக்கை மேற்கொண்ட இந்த பைக்க அதன் உரிமையாளர் சில காரணங்களால் விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதை வாங்க விருப்பமுள்ளவர்கள் வீடியோவில் உள்ள முகவரி தொடர்புகொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2019, 16:10 [IST]
English summary
Royal Enfield Bullet Modified Into Harley Davidson Fatboy. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+