போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞருக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று பரிசாக கிடைத்தது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு திகழ்கிறது. பெரும்பாலான ராயல் என்பீல்டு உரிமையாளர்கள், தங்கள் மோட்டார்சைக்கிளை மாடிபிகேஷன் செய்துதான் பயன்படுத்தி வருகின்றனர். ராயல் என்பீல்டு பைக்குகளில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பொறுத்துவது பொதுவான மாடிபிகேஷனாக உள்ளது.

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் அதிக சப்தத்தை ஏற்படுத்த கூடியவை. எனவே அவற்றை பயன்படுத்துவது சட்ட விரோதமாக உள்ளது. ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் பயன்படுத்துவதை மோட்டார் வாகன சட்டமும் தடை செய்கிறது. இருந்தபோதும் பெரும்பாலான பைக் ரைடர்கள் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளனர்.

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

இந்த சூழலில் ராயல் என்பீல்டு புல்லட் ரைடர் ஒருவர் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சருடன் வலம் வந்தபோது போலீசாரிடம் சிக்கி கொண்டுள்ளார். அவர் எப்படி சிக்கினார்? என்பது சுவாரஸ்யமானது. அவருக்கு போலீசார் கடுமையான அபராதத்தை விதித்து 'ஷாக்' கொடுத்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் ஹரியானாவின் கோஹனா பகுதியில் நடைபெற்றுள்ளது.

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

சம்பவத்தன்று ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் பொருத்தப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் இளைஞர் ஒருவர் ஹாயாக வலம் வந்து கொண்டிருந்தார். போதாக்குறைக்கு அவர் ஹெல்மெட் வேறு அணியவில்லை. ஹெல்மெட் அணியாமல் பைக்கில் அதிக சத்தத்துடன் வந்த அந்த இளைஞர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்தனர்.

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

எனவே பைக்கை நிறுத்தும்படி அவரிடம் போலீசார் கூறினர். ஆனால் அதிவேகத்தில் பைக்கை முறுக்கிய அவர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றார். அதிவேகத்தில் எஸ்கேப் ஆன அந்த இளைஞரை பிடிப்பதற்காக அருகில் உள்ள செக் போஸ்ட்டுகளுக்கு போலீசார் உடனடியாக தகவல் கொடுத்தனர்.

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

எனவே அடுத்த சில நிமிடங்களிலேயே மற்ற போலீசார் சிலரால், அந்த இளைஞர் மடக்கப்பட்டார். மீண்டும் ஒரு முறை அவர் தப்பித்து விட கூடாது என்பதற்காக அவரது பைக்கில் இருந்து சாவியை போலீசார் உடனடியாக எடுத்து விட்டனர். இதன்பின் பைக்கின் ஆவணங்களை கொடுக்கும்படி அந்த இளைஞரிடம் போலீசார் கேட்டனர்.

MOST READ: சென்னையில் ஏத்தரின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை...

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

ஆனால் அந்த பைக்கின் உண்மையான உரிமையாளர் நான்தான் என்பதை நிரூபிப்பதற்கான எந்த ஆவணங்களையும் அந்த இளைஞர் சமர்ப்பிக்கவில்லை. இதன்பின் வேறு ஏதேனும் விதிமுறை மீறல்களில் அந்த இளைஞர் ஈடுபட்டுள்ளாரா? என போலீசார் விசாரித்தனர். அப்போது அவரது பைக்கின் பின் பக்க நம்பர் பிளேட் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்பதும் தெரிந்தது.

MOST READ: பாஸ்ட்டேக்கால் வாகன உரிமையாளர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்... இதற்கெல்லாம் தீர்வு என்ன தெரியுமா?

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

இதன்பின் அந்த இளைஞருக்கு ஒட்டுமொத்தமாக 32,500 ரூபாயை போலீசார் அபராதமாக விதித்தனர். ஹெல்மெட் அணியாதது, ஆர்சி புக் இல்லாதது, டிரைவிங் லைசென்ஸ் இல்லாதது, இன்சூரன்ஸ் இல்லாதது, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாதது, ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் பயன்படுத்தியது, நம்பர் பிளேட் விதிகளை மீறியது ஆகிய காரணங்களுக்காக அவருக்கு இவ்வளவு பெரிய அபராதம் விதிக்கப்பட்டது.

MOST READ: மாஸ்டர் பிளான்... மோடி-நிதின் கட்கரியின் அதிரடியால் இந்தியாவில் நடந்த அதிசயம்... என்ன தெரியுமா?

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

ஆனால் அந்த பைக் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை. இதனிடையே இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது.

வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் தண்டிக்கப்பட்ட புல்லட் ரைடருக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

எனவேதான் அபராத தொகை மிக அதிகமாக உள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய அபராத தொகை விதிப்பது ஒன்றும் இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் பல முறை வாகனத்தின் மதிப்பை விட அதிக அபராத தொகை வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட வெறுப்பால் ஒருவர் பைக்கை தீ வைத்து கொளுத்திய சம்பவமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Living India News/YouTube

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Royal Enfield Bullet Rider Fined Rs.32,500 For Violating Traffic Rules. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X